கம்பராமாயணம் 445 · பால 8.38

Section பால காண்டம் / 8. வேள்விப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'உரியது இந்திரற்கு' என உலகம் ஈந்து போய்,
விரி திரைப் பால் கடல் பள்ளி மேவினான்;
கரியவன் உலகு எலாம் கடந்த தாள் இணை
திருமகள் கரம் தொடச் சிவந்து காட்ட ஏ.

பொருள் · Meaning in Tamil

உரியது இந்திரற்கு இது என்று - இம்மூவுலகாட்சியும் இந்திரனுக்கே உரிமை உடையது என்று கூறி; ஈந்து போய் - அவற்றை அந்த இந்திரனுக்கு தந்து போய்; விரிதிரைப் பாற்கடல் பள்ளி மேவினான் - விரிந்த அலைகளை உடைய பாற்கடல் படுக்கையை அடைந்தான்; உலகு எலாம் கடந்து - மூவுலகத்தையும் அளந்த; கரியவன் தாள் இணை - கருமை நிறம்வாய்ந்த அத்திருமாலின் பாதங்கள்; திருமகள் கரம் தொட - திருமகளான இலக்குமி தொட்டு வருடவே; சிவந்து காட்டின - செந்நிறம் கொண்டு விளங்கின.

உரியது: உரிமை உடையது. இந்திரன்: வானவர்க்கு அரசன். பள்ளி: படுக்கை. கரியவன்: கருநிறம் உடையவன். கரி: சாட்சி. உலகுக்குச் சாட்சி யானவன் என்றும் கூறுவர் தாளிணை: இரண்டு பாதங்கள். திருமகள்: பெரிய பிராட்டி. கரம்: கை இவ்வாறு மாவலி வரலாற்றை முனிவன் கூறினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Saying, This belongs to Intiraṉ, he gave him the worlds and went
  2. to his bed on the milk-ocean with its spreading waves;
  3. and the pair of feet of the Dark One, which had crossed all the worlds,
  4. showed red where Tirumakaḷ's hands touched them.

What the poem says

Having won back the three worlds, Viṣṇu declares that they rightfully belong to Intiraṉ, gives them to him, and returns to his couch on the Ocean of Milk.

There Lakṣmī, his consort, gently massages his feet, tired from striding across the universe, and the dark Lord's feet turn red under her touch, a tender close to the grand story.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'uriyatu intiraṟku itu' eṉṟu ulakam īntu pōy,
viri tiraip pāṟkaṭal paḷḷi mēviṉāṉ;
kariyavaṉ ulaku elām kaṭanta tāḷ iṇai
tirumakaḷ karam toṭac civantu kāṭṭiṟṟē.