கம்பராமாயணம் 444 · பால 8.37
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஓரடி உலகு எலாம் உள் அடி அடக்கிற்று - ஊன்றிய காலாகிய ஒரு அடி உலகத்தை எல்லாம் பாதத்துள் அடக்கிவிட்டது; அலகு இலா அவ்வடிக்கு - அளந்து கொள்ள இடமில்லாத அந்த மூன்றாம் அடிக்கு; அன்பன் மெய் அது ஆம் - பக்தனாகிய மகாபலியின் தலையே அளவடியாக ஆயிற்று; சிலைகுலாம் தோளினாய் - வில் பொருந்திய தோளினை உடைய இராமா!; இலைகுலாம் துழாய்முடி - இலைகள் மிகுந்த துளப மாலையை அணிந்துள்ள; ஏகநாயகன் - உலகுக்கு ஒரு தனி முதல்வனான அத்திருமாலாகிய; சாலச் சிறியன் - மிகச் சிறிய வடிவினனான அவ்வாமனன்.
இது குளகம். அடுத்த பாட்டுடன் பொருள் முடிவு பெறும். உலகு: நிலம். உள்ளடி: அடியுள் என்பது மொழிமாறி நின்றது. அலகு: அளவு. மெய் அது ஆம்: மெய்யதாம். மாவலியின் உடம்பே அளவடியாக ஆனது என்பது கருத்து. ஏக நாயகன்: தனிப்பெருந்தலைவன். ஏகம்: தனிமை. “சாலச்சிறியன்” திருமால் கொண்ட வாமன வடிவைக் குறித்ததாம். இச்சிறிய வடிவமா உலகத்தை யெல்லாம் ஓரடியுள் அடக்கியது என வியந்து கூறியதுமாம். சால: மிக. ஏ: அசை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- One pace held the whole world within the foot; for the other pace,
- which had no measure left, the devotee's body served;
- the one Lord, whose crown wears tulasi thick with leaves,
- O you whose shoulders bear the bow, he was very small!
What the poem says
The sage completes the story for Irāmaṉ, whom he addresses as the bow-shouldered prince. One stride took in the whole world, and for the third pace, with no space left to measure, Māvali offered his own body, bowing his head beneath the Lord's foot.
The verse ends in wonder: the one Lord, wearing his garland of tulasi leaves, had taken the form of a tiny dwarf. The commentary notes that the thought runs on into the next verse.