கம்பராமாயணம் 4460 · கிட்கிந்தா 10.102
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
சூடகத் தொடிக் கை மாதர் - சூடகத்தையும் தொடியையும் அணிந்த கைகளையுடைய வானரப் பெண்கள்; சுண்ணமும் தூசும் வீசி - நறுமணப் பொடிகளையும் ஆடைகளையும் வீசிக் கொண்டு; கண் அகல் கவரிக் கற்றை- விசாலமான வெண்சாமரைத் தொகுதிகளால்; கால் உற - காற்றையுண்டாக்கவும்; கலைவெண்திங்கள் - பதினாறு கலைகளும் நிரம்பிய வெண்ணிறமான சந்திரன்; விண் உற வளர்ந்தது என்ன- வானத்தில் பொருந்தி விளங்குவது போல; வெண்குடை விளங்க - வெண்கொற்றக் குடை விளங்கவும்; வீர வண்ண வில் கரத்தான் முன்னர் - வீரம் நிறைந்த அழகிய வில்லைப் பிடித்த கையையுடைய இலக்குவன் எதிரில்; கவிக் குலத்து அரசன் - வானரத் தலைவனான சுக்கிரீவன்; வந்தான் - வந்தான்.
சுண்ணமும் தூசும் வீசுதல் மகிழ்ச்சியைத் தெரிவிக்கும் என்பது. சூடகம், தொடி - கைவளையின் வகைகள் சூடகம் - முன்கைவளை. தொடி - தோள்வளை; தோள்வளை
ஆங்கிலம் · English translationAI
Translation
- As women with bangles and bracelets on their arms tossed scented powder and cloths,
- and the wind from clusters of broad fly-whisks blew,
- and the white parasol shone like the white moon with all its digits
- grown full in the sky, before the hero with the fine bow in hand came the king of the monkey race.
What the poem says
Cukkirīvaṉ comes out in full state to meet Ilakkuvaṉ. Monkey women wearing bangles and armlets throw fragrant powders and garments in celebration, attendants wave broad white fly-whisks, and the royal white parasol shines over him like the full moon with all its sixteen digits. So the monkey king advances to stand before the bowman.