கம்பராமாயணம் 4459 · கிட்கிந்தா 10.101

Section கிட்கிந்தா காண்டம் / 10. கிட்கிந்தைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அங்கதன், பெயர்த்தும் வந்து ஆண்டு அடிதொழுதானை, ஐயன்,
'எங்கு இருந்தான் நும் கோமான்?' என்றலும்,'எதிர்கோள் எண்ணி,
மங்குல் தோய் கோயில் கொற்றக் கடைத்தலை மருங்கு நின்றான்
சிங்க ஏறு அனைய வீர! செய்தவச் செல்வன்' என்றான்.

பொருள் · Meaning in Tamil

அங்கதன் - வாலி மைந்தனான அங்கதன்; பெயர்த்தும் வந்து- மறுபடியும் (இலக்குவன் உள்ள இடத்திற்கு) வந்து; ஆண்டு இணை அடி தொழுதான் - அங்கே இலக்குவனுடைய இணை அடிகளை வணங்கினான் அப்பொழுது இலக்குவன் அவனை நோக்க); ஐய நும்கோமான் - ஐயனே உங்கள் தலைவனாகிய சுக்கிரீவன்; எங்கு இருந்தான் - எங்கே இருக்கிறான்; என்றலும் - என்று கேட்ட அளவில் (அங்கதன் இலக்குவனை நோக்க), சிங்க ஏறு அனைய வீர - 'ஆண் சிங்கத்தை ஒத்த வீரனே! செய்தவச் செல்வன் - (முற்பிறப்பில்) செய்த தவமாகிய செல்வத்தையுடைய சுக்கிரீவன்; எதிர்கோள் எண்ணி - (உன்னை) எதிர் கொள்ள நினைந்து; மங்குல் தோய் கோயில் - மேகம் படிகின்ற அரண்மனையினது; கொற்றக் கடைத்தலை மருங்கு - வெற்றியமைந்த தலைவாயில் புறத்து; நின்றான் என்றான் - நிற்கின்றான் என்று சொன்னான்.

முற்பிறவியில் சுக்கிரீவன் செய்த தவப்பயனால்தான் உமது நட்பு அவனுக்கு வாய்த்தது என்பான் அவனைச் 'செய்தவச் செல்வன் என்றான் என்பது. இப் பிறப்பினும், வரும் பிறப்புகளிலும் தவம் உதவும் என்பதால் செய்தவம் என வினைத்தொகையால் குறித்தார் எதிர்கோள் - முதனிலை திரிந்த தொழிற்பெயர்

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Aṅkataṉ came back again and bowed there at his two feet. 'Sir,
  2. where is your king?' he asked; and he replied, 'Intending to receive you,
  3. he is standing beside the victorious gateway of the palace that touches the clouds,
  4. hero like a lion, he who is rich in penance performed,' he said.

What the poem says

Aṅkataṉ returns to Ilakkuvaṉ and bows at his feet. Ilakkuvaṉ asks where his king is, and Aṅkataṉ says that Cukkirīvaṉ is waiting at the great gate of the cloud-high palace to receive him.

He calls Cukkirīvaṉ "rich in penance performed": only the merit of austerities done in earlier lives could have won him the friendship of Irāmaṉ and Ilakkuvaṉ.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṅkataṉ, peyarttum vantu āṇṭu aṭi iṇai toḻutāṉ, 'aiya!
eṅku iruntāṉ num kōmāṉ?' eṉṟalum, 'etirkōḷ eṇṇi,
maṅkul tōy kōyil koṟṟak kaṭaittalai maruṅku niṉṟāṉ
ciṅka ēṟu aṉaiya vīra! ceytavac celvaṉ' eṉṟāṉ.