கம்பராமாயணம் 4458 · கிட்கிந்தா 10.100

Section கிட்கிந்தா காண்டம் / 10. கிட்கிந்தைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1தூய திண் பளிங்கின் செய்த சுவர்களில், தலத்தில், சுற்றி
நாயக மணியிற் செய்த நனி நெடுந் தூணின் நாப்பண்,
சாயை புக்கு உறலால், கண்டோர் அயர்வுற,'கை விலோடும்
ஆயிர மைந்தர் வந்தார் உளர்'எனப் பொலிந்தது, அவ் ஊர்.

பொருள் · Meaning in Tamil

அவ் ஊர் - அந்தக் கிட்கிந்தா நகரமானது; தூய திண் பளிங்கின் செய்த - தூய உறுதியான படிகக் கற்களால் செய்யப்பட்ட; சுவர்களின் தலத்தில் - சுவர்களின் இடங்களிலும்; சுற்றில் நாயக மணியின் செய்த - சுற்றுப் புறங்களிலும், சிறந்த நவமணிகள் இழைத்துச் செய்த; நனி நெடுந் தூணின் நாப்பண் - மிக உயர்ந்த தூண்களின் இடையிலும்; சாயை புக்கு உறலால் - (இலக்குவனது) நிழல் சென்று பொருந்துவதால், கண்டோர் அயர்வுற - பார்த்தவர் யாவரும் மாறாக நினைக்கும்படி; கை விலோடும் - கையில் தாங்கிய வில்லுடனே, ஆயிரம் மைந்தர் - ஆயிரம் வீரர்கள்; வந்தார் உளர் என - வந்துள்ளார்கள் என்று கருதும்படி; பொலிந்தது - விளங்கியது.

இலக்குவன் செல்லுகின்ற இடங்களிலுள்ள பளிங்குச் சுவர்களிலும், இரத்தினத் தூண்களிலும் அவனது சாயை ஆயிரக் கணக்காகத் தோன்றியதால், பல வீரர் திரண்டு வந்தார்களோ என்று ஐயுறும்படி அந்த ஊர் விளங்கியது என்பது. நாயகம் - தலைமை. தற்குறிப்பேற்றவணி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. On the walls built of pure, strong crystal, on the floors, all around,
  2. and among the very tall pillars made of the finest gems,
  3. his reflection entered and settled, so that onlookers were bewildered, and that city shone
  4. as though a thousand heroes had come, each with a bow in hand.

What the poem says

As Ilakkuvaṉ walks through Kiṭkintai, his image is reflected in the crystal walls and floors and the jewelled pillars. The onlookers are confused: it seems as if a thousand bowmen have entered the city, not one.

The verse is a poetic fancy: the poet attributes an imagined cause to a natural effect, praising both the splendour of the monkey capital and the commanding presence of Ilakkuvaṉ.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tūya tiṇ paḷiṅkiṉ ceyta cuvarkaḷiṉ, talattil, cuṟṟil,
nāyaka maṇiyiṉ ceyta naṉi neṭun tūṇiṉ nāppaṇ,
cāyai pukku uṟalāl, kaṇṭōr ayarvuṟa, 'kai vilōṭum
āyiram maintar vantār uḷar' eṉap polintatu, av ūr.