கம்பராமாயணம் 4457 · கிட்கிந்தா 10.99
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
உரைத்த செஞ்சாந்தும் - அரைத்த சிவந்த சந்தனக் குழம்பும்; பூவும் சுண்ணமும் - மலர்களும் நறுமணப் பொடிகளும்; புகையும் - (அகில் முதலியவற்றின் நறும்புகையும்; ஊழின் நிரைத்த பொன் குடமும் - முறையாக வைக்கப் பெற்ற குடங்களும், தீப மாலையும் - விளக்குகளின் வரிசையும்; நிகர் இல் முத்தும் - ஒப்புமை இல்லாத நல்ல முத்து மாலைகளும்; குரைத்து எழு விதானத்தோடு - ஒலித்து விளங்குகின்ற விதானங்களோடு; தொங்கலும் - பீலிக் குஞ்சங்களும்; கொடியும் சங்கும் - கொடிகளும் சங்குகளும்; இரைத்து இமிழ் முரசும் - இரைந்து ஒலிக்கின்ற முரசங்களும்; முற்றும் - (ஆகிய) இவை யாவும்; வீதி எல்லாம் - (கிட்கிந்தா நகரத்) தெருக்களில் எல்லாம்; இயங்கின - (சென்று) நிறைந்தன.
இலக்குவன் வருகையை யுணர்ந்த கிட்கிந்தா நகர மக்கள் மங்கலப் பொருள்களைக் கொண்டு வரவேற்றனர் என்பது. அட்டமங்கலங்கள்: கண்ணாடி, பூரண கும்பம், டபம், வெண்கவரி, தோட்டி, மகள் உருவம், ஸ்வஸ்திகம், விளக்கு என்பன.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Ground red sandal paste, and flowers, and scented powder, and incense, golden pots
- set out in due order, and garlands of lamps, and pearls without equal,
- and hanging tassels with canopies that rustle and rise, and banners, and conches,
- and roaring, booming drums, all of these went along, through every street.
What the poem says
The whole city of Kiṭkintai turns out to welcome Ilakkuvaṉ with auspicious things: sandal paste, flowers, fragrant powders, incense, rows of golden pots, strings of lamps, pearl garlands, canopies with hanging tassels, banners, conches and booming drums fill every street. The commentary recalls the traditional "eight auspicious objects" used in such receptions, among them the mirror, the full pot, the fly-whisk, the svastika and the lamp.