கம்பராமாயணம் 4462 · கிட்கிந்தா 10.104
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
செம்மலை - தலைமை பொருந்திய இலக்குவனை; எதிர்கோள் எண்ணி- எதிர் கொள்ள நினைந்து; திருவொடு மலர்ந்த செல்வன் - அரசச்செல்வத்துடன் விளங்கும் சுக்கிரீவன்; வெம் முலை மகளிர் வெள்ளம் - விரும்பப்படும் முலைகளையுடைய வானரப் பெண்களின் கூட்டம், மீன் என விளங்க - நட்சத்திரங்களைப் போல் விளங்க (அவர்களின் இடையில்); விண்ணில் சும்மை வான் மதியம் குன்றில் தோன்றியது எனவும் - தனக்குரிய ஒளியுடன் வானில் காணப்படும் வெண்மையான சந்திரன் மலையில் தோன்றியது போன்றும்; தோன்றி - காணப்பட்டு; அம்மலை உதயம் செய்த- அந்த உதயகிரியில் உதித்து ஒளிவீசும், தாதையும் அனையன் ஆனான் - தந்தையாகிய சூரியனையும் ஒத்து விளங்கினான்.
சுக்கிரீவனுக்கு அவனது மகிழ்ச்சியின் சிறப்பை விளக்கச் சந்திரனும், அவனது அழகைச் சுட்ட உதயகிரியில் தோன்றி சூரியனும் உவமைகளாம். சும்மை - பேரொலி. கோள் - முதனிலை திரிந்த தொழிற்பெயர்
ஆங்கிலம் · English translationAI
Translation
- With the flood of women with desirable breasts shining like stars, he appeared
- like the bright moon of the sky, amid its clamour, risen upon a mountain;
- the lord blooming with royal fortune, intent on receiving the noble one,
- became like his own father too, who rises over that mountain of dawn.
What the poem says
Cukkirīvaṉ advances to receive Ilakkuvaṉ amid a crowd of monkey women who shine around him like stars. The poet gives two images: he looks like the full moon appearing over a hill, and also like his father the Sun rising over the eastern mountain of dawn. The moon suggests his joy and the sun his splendour; Cukkirīvaṉ is the son of the Sun god.