கம்பராமாயணம் 4463 · கிட்கிந்தா 10.105

Section கிட்கிந்தா காண்டம் / 10. கிட்கிந்தைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தோன்றலும் - சிறந்தவனான இலக்குவனும்; தோற்றிய அரிக் குலத்து அரசை - (எதிரில்) காணப்பட்ட வானர குலத்து அரசனான சுக்கிரீவனை; ஏற்று எதிர் நோக்கினன் - வரவேற்று எதிரே பார்த்தான்; அவ்வழிச் சீற்றம் எழுந்தது - அப்போது (இலக்குவனுக்குச் சினம் மூண்டது; தருமத்தின் அமைதி உன்னுவான் - தருமத்தின் நிலைமையைக் கருதுபவனான அந்த இலக்குவன்; அங்கு அதுதனை - அந்த இடத்தில் அந்தச் சினத்தை; தெளிந்த சிந்தையால் - தெளிவான தனது மனத்தினால்; ஆற்றினன் - தணித்துக் கொண்டான்.

தங்கள் திறத்தில் குறித்த தவணைப்படி வாராது தவறிய சுக்கிரீவன் எதிர்ப்பட்ட அளவில் இலக்குவனுக்குச் சினம் மூண்டதை இப்பாடல் சுட்டும். தாரை, அனுமன், அங்கதன் ஆகியோரால் இலக்குவனின் சினம் பெரும்பாலும் தணிந்தது என்பதும், அது முற்றும் நீங்கவில்லை என்பதும் சுக்கிரீவனைக் கண்டதும் தருமத்தின் அமைதி உன்னியும், இராமன் முன்கூறியதை ஒட்டியும் தன் தெளிந்த சிந்தையால் அச்சினத்தை மாற்றினான் என்பதும் இங்கு அறியத் தக்கன. இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும் புணரின் வெகுளாமை நன்று - (குறள்- 308) 'காயும் கதமின்மை நன்று' (நாலடியார்- சினமின்மை: /) 'நேர்த்தின்னா மற்றவர் செய்தக்கால் தாம் அவரைப் பேர்த்தின்னா செய்யாமை நன்று'- (நாலடி. சினமின்மை: 7) என்பன ஒப்புநோக்கத்தக்கன.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When the noble one saw the king of the monkey race who had appeared,
  2. he received him and looked at him face to face; at that moment there rose
  3. anger; but there, with his clear mind, he calmed it,
  4. for he kept in mind the restraint that dharma requires.

What the poem says

As soon as Ilakkuvaṉ sees Cukkirīvaṉ, the king who broke his promise, his anger flares again. Tārai, Aṉumaṉ and Aṅkataṉ had largely calmed him, but not completely. Now, mindful of what dharma demands and of what Irāmaṉ had told him before he set out, Ilakkuvaṉ masters his anger with a clear mind. The commentary cites Tirukkuṟaḷ and Nālaṭiyār verses praising freedom from anger even under great provocation.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tōṟṟiya arik kulattu aracai tōṉṟalum
ēṟṟu etirnōkkiṉaṉ; eḻuntatu av vaḻic
cīṟṟam; aṅku atutaṉai teḷinta cintaiyāl
āṟṟiṉaṉ tarumattiṉ amaiti uṉṉuvāṉ.