கம்பராமாயணம் 4464 · கிட்கிந்தா 10.106

Section கிட்கிந்தா காண்டம் / 10. கிட்கிந்தைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1எழு என மலை என எழுந்த தோள்களால்
தழுவினர் இருவரும்; தழுவி தையலார்
குழுவொடும் வீரர்தம் குழாத்தினோடும் புக்கு
ஒழிவு இல் பொற் கோபுரத்து உறையுள் எய்தினார்.

பொருள் · Meaning in Tamil

இருவரும் - (இலக்குவன் சுக்கிரீவன் என்ற) அந்த இருவரும்; எழுவினும் மலையினும் எழுந்த தோள்களால் - இரும்புத் தூண், மலை என்ற இவற்றைக் காட்டிலும் பருத்து ஓங்கிய (தம்) தோள்களால்; தழுவினர் - ஒருவரை ஒருவர் தழுவிக் கொண்டார்கள்; தழுவி - (அவ்வாறு) தழுவிக் கொண்டு; தையலார் குழுவொடும் - வானர மகளிரின் கூட்டத்துடனும்; வீரர்தம் குழாத்தினோடும் - வீரர் கூட்டத்தோடும், ஒழிவு இலா - எடுக்க எடுக்கக் குறையாத; பொற்குழாத்து உறையுள் - பொன்திரள் நிறைந்த அரண்மனைக்குள்ளே; புக்கு எய்தினார் - சென்று சேர்ந்தார்கள்.

பொற்குழாத்து உறையுள் - நிதியறை. தோளுக்கு எழுவும் மலையும் உவமைகளாம். எழு - தூண்; இங்கு இரும்புத் தூணைக் குறித்தது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With shoulders that rose higher than iron pillars and mountains
  2. the two embraced; and having embraced, with the company of women
  3. and the throng of warriors they entered
  4. and reached the dwelling full of gold that never runs out.

What the poem says

Ilakkuvaṉ and Cukkirīvaṉ embrace, their mighty shoulders compared to iron pillars and mountains. Then, accompanied by the monkey women and the throng of warriors, they enter the palace, a treasure-house whose heaps of gold never diminish however much is taken from them.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eḻuviṉum malaiyiṉum eḻunta tōḷkaḷāl
taḻuviṉar iruvarum; taḻuvi taiyalār
kuḻuvoṭum vīrartam kuḻāttiṉōṭum pukku
oḻivu ilāp poṟ kuḻāttu uṟaiyuḷ eytiṉār.