கம்பராமாயணம் 4471 · கிட்கிந்தா 10.113

Section கிட்கிந்தா காண்டம் / 10. கிட்கிந்தைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'மூட்டிய பழி எனும் முருங்கு தீ அவித்து
ஆட்டினை கங்கைநீர் அரசன் தேவியைக்
காட்டினை எனின் எமைக் கடலின் ஆர் அமிழ்து
ஊட்டினையால்; பிறிது உயவும் இல்லையால்.

பொருள் · Meaning in Tamil

அரசன் தேவியை - 'இராமன் தேவியாகிய சீதை': காட்டினை எனின் - இருக்குமிடத்தைக் காட்டுவாயானால்; எமை - எங்களைச் சுற்றி, மூட்டிய பழி எனும் - மூண்டுள்ள பழியாகிய; முருங்கு தீ அவித்து - அழிக்கவல்ல நெருப்பைத் தணித்து; கங்கை நீர் ஆட்டினை - கங்கையாற்றின் நீரால் நீராட்டினவனாவாய் (மேலும்; - கடலின் ஆர் அமிழ்து ஊட்டினை - பாற்கடலில் தோன்றிய அரிய அமிழ்தத்தால் எங்களை உண்பித்தவனாவாய், பிறிது உய்வும் இல்லை - பிறகு எத்துயரமும் எங்களுக்கு இல்லாமற்போகும்.

அமுது அருந்துக' என்ற சுக்கிரீவனுக்கு இலக்குவன் தான் விரும்பும் மஞ்சனத்தையும் அமிழ்தத்தையும் சுட்டினான் என்பது. நீராடுவதால் வெப்பம் தணிதலும், நீரால் நெருப்பு அவிதலுமாகிய இயல்புகள் இங்குக் கருதத்தக்கன.

இலக்குவன் சுக்கிரீவனது கடமையையும், தான் வந்த காரணத்தையும் குறிப்பாகச் சுட்டினான் என்பது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Putting out the consuming fire of disgrace that has been kindled,
  2. you will have bathed us in Ganges water; if you show us the king's queen,
  3. you will have fed us the rare nectar of the ocean;
  4. there is no other salvation for us.'

What the poem says

Ilakkuvaṉ turns the king's offer around. The bath and the feast he really wants are these: if Cukkirīvaṉ finds out where Cītai, Irāmaṉ's queen, is held, that will quench the fire of disgrace burning around the brothers, as if they had bathed in the Ganges, and it will be like feeding them the nectar churned from the ocean of milk. Nothing else can save them. In this way he politely reminds Cukkirīvaṉ of his duty and of why he came.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'mūṭṭiya paḻi eṉum muruṅku tī avittu
āṭṭiṉai kaṅkai nīr aracaṉ tēviyaik
kāṭṭiṉai eṉiṉ emaik kaṭaliṉ ār amirtu
ūṭṭiṉaiyāl; piṟitu uyvum illaiyāl.