கம்பராமாயணம் 448 · பால 8.41
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
மண்ணினைக் காக்கின்ற மன்னன் மைந்தர்கள் - நல்லாட்சி செய்து காக்கும் மன்னனான தயரதனுடைய மைந்தர்களான இராம, இலக்குவர்கள்; முனிவன் விண்ணவர்க்கு ஆக்கிய வேள்வியை - விசுவாமித்திர முனிவர் தேவர்களின் பொருட்டுச் செய்த வேள்வியை; கண்ணினைக் காக்கின்ற இமையின் - கண்விழியைக் காக்கும் இமைபோல; இரண்டு மூன்று நாள் காத்தனர் - ஆறு நாட்கள் வரை காப்பாற்றினர்; எண்ணுதற்கு ஆக்க அரிது - (இச்செயல்) நினைத்துப் பார்ப்பதற்கும் செய்தற்கும் அரியதேயாம்.
வேள்வி எண்ணுதற்கு ஆக்கரிது என்றும் பொருள் கொள்வர். விண்ணவர்: தேவர். அவர் பொருட்டுச் செய்ததாதலின் “விண்ணவர்க் காக்கிய வேள்வி” என்றார். மைந்தர்: புத்திரர் மண்: பூமி. இராம, இலக்குவர்களின் காவலின் வேள்வி ஆறு நாட்கள் நடந்தது என்பது கருத்து.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Hard even to conceive of: for twice three days
- the sacrifice the sage performed for the gods
- the sons of the king who guards the earth
- guarded as the eyelids guard the eyes.
What the poem says
For six days ("two times three") the sons of Tacarataṉ, the king who protects the earth, guard the sage's sacrifice, offered for the sake of the gods, as closely as eyelids protect the eye.
Their vigilance is something hard even to imagine, let alone carry out.