கம்பராமாயணம் 449 · பால 8.42
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
காத்தனர் திரிகின்ற - வேள்வியைக் காத்தவர்களாக, அந்த வேள்விச் சாலையைச் சுற்றித் திரிந்துகொண்டிருந்த; காளை வீரரில் - அந்தக் காளை போன்ற இரு வீரர்களில்; மூத்தவன் - மூத்தவனாகிய இராமபிரான்; முழுது உணர்முனியை முன்னி - யாவும் அறிந்த முனிவனாகிய விசுவாமித்திரனை அடைந்து; ஏத்த அரும் குணத்தினாய் - போற்றுதற்கரிய உயர்குணத்தோய்; நீ தீத்தொழில் இயற்றுவர் என்ற தீயவர் - கொடுந்தொழில் செய்பவர் என்று நீ கூறிய அந்தக் கொடிய அசுரர்கள்; வருவது என்று என்றான் - இந்த வேள்விச் சாலைக்கு வருவதுதான் எப்போது? என்று கேட்டான்.
காத்தனர்: முற்றெச்சம். காளைவீரர்: காளைப்பருவத்தினரான வீரர்கள் எனவும் கூறலாம். முழுதுணர்முனி: அனைத்தும் அறிந்தவன். உணர்முனி: வினைத்தொகை. ஏத்து+அரும்: போற்றற்கரிய. வருவது: வருவதாகிய காலத்தின் மேல் நின்றது. “ஆறுநாட்களும் வராதவர் என்றுதான் வருவது” என ஐயம் தோன்றக் கேட்டனன் எனலாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Of the two young bull-like heroes who kept guard as they roamed,
- the elder went up to the all-knowing sage: You,
- whose virtues are beyond praise, the evil ones you said would do their evil work,
- when will they come? he asked.
What the poem says
After six days of patrolling around the sacrifice, Irāmaṉ, the elder of the two young warriors, approaches the all-knowing sage. He asks, perhaps beginning to doubt, when the demons who were said to disrupt the rite will actually appear.