கம்பராமாயணம் 450 · பால 8.43

Section பால காண்டம் / 8. வேள்விப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வார்த்தை மாறு உரைத்திலன் முனிவன், மௌனியாய்ப்
போர்த் தொழில் குமரனும் தொழுது போந்த பின்
பார்த்தனன் விசும்பினைப், பருவ மேகம் போல்
ஆர்த்தனர், இடித்தனர், அசனி அஞ்ச ஏ.

பொருள் · Meaning in Tamil

முனிவன் மெளனியாய் - விசுவாமித்திர முனிவன் வாய் பேசாதவனாக; வார்த்தை மாறு உரைத்திலன் - மறுமொழி கூறவில்லை; போர்த்தொழில் குமரனும் - போர்த் தொழில் வல்ல இராமபிரானும்; தொழுது போந்தபின் - (அஃதறிந்து) முனிவனை வணங்கிச் சென்றபின்னர்; விசும்பினைப் பார்த்தனன் - வானத்தை நோக்கினான்; பருவ மேகம் போல் ஆர்த்தனர் - (அப்போது அரக்கர் வந்து) பருவகால மேகத்தைப் போல ஆரவாரித்தவராகி; அசனி அஞ்ச இடித்தனர் - இடியும் அஞ்சும்படி இடித்தார்கள்.

வார்த்தை மாறு: மறு வார்த்தை (மறுமொழி). மெளனி: மெளனவிரதம் மேற்கொண்டவன். போந்த: வந்த. அசனி: இடி. ஆர்த்தல்: ஆரவாரித்தல். பருவ மேகம்: மழைக்காலத்து மேகம். “தீயவர் என்று வருவது” எனக்கேட்ட ராமனுக்கு முனிவன் மறுமொழி கூறவில்லை. வணங்கி மீண்ட ராமன் வானத்தைப் பார்த்தான். அரக்கர் வந்து ஆரவாரித்தனர் என்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The sage, keeping silence, gave no word in reply;
  2. when the prince skilled in war had bowed and gone back,
  3. he looked at the sky; like monsoon clouds
  4. they roared, and they thundered, so that the thunderbolt itself took fright.

What the poem says

Vicuvāmittiraṉ is under a vow of silence during the sacrifice and does not answer. Irāmaṉ bows and returns to his post.

As he looks up at the sky, the Rākṣasas arrive, roaring like monsoon storm-clouds, with a din so terrible that thunder itself is frightened.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vārttai māṟu uraittilaṉ muṉivaṉ, mavuṉiyāy,
pōrt toḻil kumaraṉum toḻutu pōntapiṉ
pārttaṉaṉ vicumpiṉai, paruva mēkampōl
ārttaṉar, iṭittaṉar, acaṉi añcavē.