கம்பராமாயணம் 451 · பால 8.44

Section பால காண்டம் / 8. வேள்விப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

எய்தனர் - (அவ்வரக்கர்) அம்புகளை வில்லில் தொடுத்து எய்தார்கள்; எறிந்தனர் - சூலம் வேல் முதலியவைகளை எடுத்து மேலே எறிந்தார்கள்; எரியும் நீரும் ஆய் பெய்தனர் - நெருப்பையும் தண்ணீரையும் பெய்தார்கள்; பெருவரை பிடுங்கி வீசினர் - பெரிய மலைகளைப் பிடுங்கி வீசினார்கள்; வைதனர் தெழித்தனர் - வைதார்கள், அதட்டினார்கள்; மழுக்கொண்டு ஓச்சினர் - மழுவை எடுத்துக் கொண்டு வீசினார்கள்; ஒன்றல தீய மாயம் செய்தனர் - பலவிதமான மாயச் செயல்களைச் செய்தார்கள்.

எய்தல்: அம்பெய்தல். பெய்தல்: கொட்டுதல். எறிதல்: வேலெறிதல். வரை: மலை. வைதல்: நிந்தித்தல். தெழித்தல்: அதட்டுதல். மழு: மழுப்படை. ஓச்சல்: வீசுதல். மாயம்: மாயச் செயல்கள். ஒன்று அல: ஒன்றல்லாத பல செயல்கள் என்ற பொருளை உணர்த்தும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. They shot arrows, they hurled weapons, they rained down fire and water,
  2. they tore up great hills and flung them,
  3. they cursed, they bellowed, they swung battle-axes,
  4. they worked not one but many evil sorceries.

What the poem says

The demons attack the sacrifice with everything they have. They shoot arrows, hurl spears and tridents, pour down fire and water, uproot and throw mountains, shout abuse and threats, swing axes, and conjure up one evil illusion after another. The verse piles verb on verb to convey the chaos.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eytaṉar, eṟintaṉar, eriyum nīrumāyp
peytaṉar, peru varai piṭuṅki vīciṉar,
vaitaṉar, teḻittaṉar, maḻuk koṇṭu ōcciṉar,
ceytaṉar oṉṟu ala tīya māyamē.