கம்பராமாயணம் 452 · பால 8.45
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
உருத்து வீசின ஊன் நகுபடைக்கலம் - (அந்த அரக்கர்களால்) உருத்து எறியப்பட்ட பகைவர் உடல் வன்மையை எளிதாக மதித்து உள்ளே புகும் படைக்கருவிகள்; காலமாரி போல் கானகம் மறைத்தன - பருவ கால மழையைப் போல் காட்டையே மூடிவிட்டன; மீன் நகு திரைக்கடல் - மீன்களைக் கொண்ட அலைகடல்; விசும்பு போர்த்த என - மேலெழுந்து வானத்தை மறைத்தது போல; வளைந்த சேனை வானகம் மறைத்தன - (வேள்விச் சாலையை) வளைத்துக் கொண்ட அந்தச் சேனை வானவீதியையே மூடி நின்றது.
ஊன் நகு படைக்கலம்: உடம்பை இகழும் படைக்கலங்கள் என்றது எவரது உடலும் அதற்குப் பொருட்டல்ல என்பதை உணர்த்தும். நகுதல்: இகழ்ந்து நகைத்தல். உருத்து: சினம் கொண்டு (கோபித்து). வீசின: வீசினவான படைக்கலம் - வினையாலணையும் பெயர் கானகம் என்பவைகளில் அமைந்த “அகம்” அடைமொழி. “மீன்நகு” இதில் நகுதல்: ஒளிர்தலாம். திரைக்கடல்: அலைகளை உடைய கடல். இரண்டன் உருபும் பயனும் உடன் தொக்க தொகை. போர்த்தது என போர்த்தென என நின்ற தொகுத்தல் விகாரம். அரக்கர்கள் சினம் கொண்டு வீசிய படைக்கலங்கள் - பருவகால மழை போல, அந்தக் காட்டையே மூடிவிட்டன. வேள்விச் சாலையை முற்றுகையிட்டுச் சுற்றி வளைத்துக் கொண்ட அசுரசேனை அலைகளை உடைய கடலே மேலெழுந்து - வானத்தை மூடிக் கொண்டது போலக் காணப்பட்டது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The flesh-mocking weapons they hurled in rage
- covered the forest like the rains of the season;
- as if the wave-tossed sea, glittering with fish, had wrapped the sky,
- the army that closed around them covered the heavens.
What the poem says
The demon host closes in around the sacrificial ground. Their weapons, so deadly they make light of any body, rain down so thickly that the forest is hidden as if by a monsoon downpour.
The besieging army itself is so vast that it seems as though the ocean had risen up, waves glittering with fish, and covered the entire sky.