கம்பராமாயணம் 4496 · கிட்கிந்தா 10.138
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தாமரைச் செங்கணான் - செந்தாமரை மலர்போன்ற சிவந்த கண்களையுடைய இராமன்; அங்கதற்கு இனியன அருளி - அங்கதனுக்கு இனிமையான சொற்களைக் கூறி; ஐய- ஐய; போய் உந்தையோடு தங்குதி - போய் உன் தந்தையாகிய சுக்கிரீவனோடு இருப்பாய்; என்று - என்று விடை தந்து அனுப்பி; தம்பியும் - இலக்குவனும்; சிந்தையின் மங்கையும் - (எப்பொழுதும்) தன் மனத்தே குடியிருக்கும் சீதையும்; தானும் - தானுமாக; அன்று அவ்வழி - அந்த இரவில் அவ் இடத்திலே; வைகினான்- தங்கியிருந்தான்.
இராமன் இடைவிடாது சீதையை நினைத்துக் கொண்டேயிருத்தலால் 'சிந்தையின் மங்கை' என்றார்.
தம்பியும் சிந்தையின் மங்கையும் தானும் வைகினான்'- தலைமை பற்றி வந்த பால் வழுவமைதி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Speaking kind words to Aṅkataṉ, 'Sir, go
- and stay with your father,' he of the red lotus eyes,
- with his younger brother, himself, and the lady in his heart,
- stayed in that place that day.
What the poem says
Irāmaṉ speaks kindly to Aṅkataṉ and sends him back to stay with his "father" Cukkirīvaṉ. That night Irāmaṉ remains on the mountain with Ilakkuvaṉ and with Cītai, who is present only in his heart, since he thinks of her without ceasing. The verse closes the episode of Kiṭkintai.