கம்பராமாயணம் 4495 · கிட்கிந்தா 10.137
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
விரும்பிய இராமனும் - (சுக்கிரீவனிடம்) அன்புடைய இராமனும்; (அவனை நோக்க); வீர- வீரனே! நிற்கு அது - உனக்கு (ச் சேனை திரட்டி முடித்தலாகிய) அச் செயலானது; ஓர் அரும்பொருள் ஆகுமோ - அரிய காரியமாகுமோ? அமைதி நன்று - (உனது) அடக்கமான குணம் சிறந்ததாக உள்ளது; எனா - என்று சொல்லி; பெரும்பகல் இறந்தது - (இப்பொழுது, நீண்ட பகலோ கழிந்துவிட்டது; பெயர்தி - (ஆகவே இன்று புறப்பட்டுச் சென்று; நின் படை - உனது சேனை; பொருந்துழி வா - திரண்டு வந்த போது (அவற்றோடு) வருவாய்; என - என்று இராமன் விடை கொடுக்க; தொழுது போயினான் - இராமனை வணங்கி (ச் சுக்கிரீவன்) சென்றான்.
சுக்கிரீவன் தன் சேனை தங்கியுள்ள பாசறைக்குச் சென்றான் என்பது. பெயர்தி: முற்றெச்சம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Irāmaṉ, full of affection, said, 'Hero, could that be
- a hard thing for you? Your restraint is good';
- and, 'The long day has passed; go back, and when your army
- has assembled, come,' and he bowed and went away.
What the poem says
Irāmaṉ graciously reassures Cukkirīvaṉ that gathering the army is no hard task for so mighty a king, and praises his modest bearing. Since the long day is now over, he tells Cukkirīvaṉ to return to his camp and come back once the whole army has assembled. Cukkirīvaṉ bows and departs.