கம்பராமாயணம் 4494 · கிட்கிந்தா 10.136
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஒன்பதின் ஆயிரம் கோடி - (இப்பொழுது என்னுடனே) ஒன்பதினாயிரங் கோடிக் கணக்கான; நின்பெருஞ் சேனை - உனது பெரிய வானர சேனை, உற்றது - வந்துள்ளது; அந் நெடிய சேனைக்கும் - (இனி வரவேண்டிய) அந்தப் பெரிய சேனைக்கு; நன்கு உறும் அவதி நாள் நாளை - ஒன்று திரண்டு வந்து சேர்வதற்குரிய நாளும் நாளைக்கே; நண்ணிய பின் - அந்தச் சேனையும் வந்த பிறகு; செயத் தக்கது- செய்யவேண்டியதைப் பற்றி; பேசற்பாற்று - பேசுவது தகுதி யுடையது; என்றான் - என்று கூறிமுடித்தான்.
வானர சேனையுடன் அனுமன் வந்த பிறகே செய்யத்தக்கதைப் பற்றிப் பேசவேண்டுமென்று சுக்கிரீவன் கருதினான் என்பது. தான் இராமனுக்கு அடியவன் என்ற எண்ணத்தால் சுக்கிரீவன் தன் சேனையை 'நின் பெருஞ் சேனை' என்றான்.
நெடியசேனை - துணைப்படை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Nine thousand crores of your great army
- have already arrived; for that vast army
- the fixed day to gather fully is tomorrow; once it has come,
- what must be done is fit to be discussed,' he said.
What the poem says
Cukkirīvaṉ tells Irāmaṉ that nine thousand crores of troops are already with him, and the larger force still being mustered is due to arrive by tomorrow. Once it is here, they can decide together what must be done. He calls the monkey army "your great army", since he regards himself as Irāmaṉ's servant.