கம்பராமாயணம் 4493 · கிட்கிந்தா 10.135

Section கிட்கிந்தா காண்டம் / 10. கிட்கிந்தைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'கோடி ஓர் ஆயிரம் குறித்த தூதுவர்
ஓடினர்; நெடும்படை கொணர்தல் உற்றதால் :
நாள்தரக் குறித்ததும் இன்று நாளை; அவ்
ஆடல் அம் தானையோடு அவனும் எய்துமால்.

பொருள் · Meaning in Tamil

கோடி ஓர் ஆயிரம் - ஓராயிரங் கோடியாக, குறித்த கோது இல் தூது- கணக்கிடப்பட்ட குற்றமற்ற தூதர்கள்; நெடும் படை - பெரிய வானரசேனைகளை; கொணர்தல் உற்றது ஓடின - திரட்டிக் கொண்டு வரும் பொருட்டு(ச் செய்தி செல்ல) விரைந்து சென்றுள்ளார்கள்; (இது வரை வானரப் படைகள் வராததால் அவற்றைத் திரட்டி வருவதற்கு அனுமன் காத்திருக்கிறான்); தரக் குறித்தது நாளும் உற்றது - (அவ்வாறு) கொண்டு வருவதற்குக் குறித்த நாளும் வந்து விட்டது; ஆல் - ஆதலால்; இன்று நாளை - இன்று அல்லது நாளை; அவ் ஆடல் அம் தானையோடு - வலிமையுள்ள அந்த வானர சேனையுடன்; அவனும் எய்தும் - அந்த அனுமனும் இங்கே வந்துவிடுவான் (என்றான்.

ஆல் - இரண்டனுள் முன்னது 'ஆதலால்' என்பதன் விகாரம்; பின்னது ஈற்றசை. அடல் - வலி: இங்கே ஆடல் என நீண்டது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'A thousand crores of faultless messengers, as reckoned,
  2. have run off; the bringing of the great army has begun;
  3. the day fixed for bringing them is today or tomorrow; with that
  4. mighty and fine host he too will arrive.'

What the poem says

Cukkirīvaṉ explains Aṉumaṉ's absence. A thousand crores of reliable messengers have gone out to gather the monkey armies, and Aṉumaṉ has stayed behind to bring them in. The day appointed for their arrival has come, so today or tomorrow Aṉumaṉ will arrive here with that mighty host.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'kōṭi ōr āyiram kuṟitta kōtu il tūtu
ōṭiṉa; neṭum paṭai koṇartal uṟṟatāl:
nāḷ tarak kuṟittatum iṉṟu nāḷai; av
āṭal am tāṉaiyōṭu avaṉum eytumāl.