கம்பராமாயணம் 4492 · கிட்கிந்தா 10.134
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ஆரியன் - இராமன்; பின்னரும் அமைந்து - மறுபடியும் சொல்லத் தொடங்கி (சுக்கிரீவனை நோக்கி), நன்கு உணர் மாருதி - (முக் காலத்தையும்) நன்றாக அறியவல்ல காற்றுக் கடவுளின் மகனான அனுமன்; எவ்வழி மருவினான் என - எங்கே இருக்கிறான் என்று கேட்க; (அதற்கு); சூரியன் கான்முளை - சூரியன் மகனான சுக்கிரீவன்; அவன் - அந்த அனுமன்; நீர் அரும் பரவையின் - நீர் நிரம்பிய அரிய கடல் போன்ற; நெடிய சேனையான் - பெருஞ் சேனையையுடையவனாய்; தோன்றும் - வந்து சேருவான்.
இராமன் அனுமனைக் குறித்தத் தனியே வினவியதால் அவனிடம் இராமன் வைத்துள்ள பேரருள் தோன்றும். பரவை பரந்திருத்தலின் கடலுக்குக் காரணக் குறியாயிற்று.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The noble one, settling again, asked, 'Where has Māruti,
- who knows all things well, gone?' and
- the offspring of the Sun replied, 'He will appear,
- with an army vast as the sea with its waters hard to cross.'
What the poem says
Irāmaṉ asks where Aṉumaṉ, son of the Wind, is. That Irāmaṉ singles him out shows his special regard for Aṉumaṉ. Cukkirīvaṉ answers that Aṉumaṉ will soon arrive at the head of an army as vast as the ocean.