கம்பராமாயணம் 4491 · கிட்கிந்தா 10.133

Section கிட்கிந்தா காண்டம் / 10. கிட்கிந்தைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1திரு உறை மார்பனும் தீர்ந்ததேயும் வந்து
ஒருவ அருங் காலம் உன் உரிமையோர் உரை
தரு வினைத்து ஆகையின் தாழ்விற்று ஆகுமோ?
பரதன் நீ! இனையன பகர்தியோ?'என்றான்.

பொருள் · Meaning in Tamil

திரு உறை மார்பனும் - திருமகள் எப்பொழுதும் தங்கியுள்ள மார்பையுடைய இராமனும்; ஒருவ அருங்காலம் - எளிதில் கழியாத கார்காலம்; வந்து தீர்ந்ததேயும் - வந்து நீங்கியதாகவும், உன் உரிமை ஓர் உரை - உன் கடமையை உணர்ந்து பேசுகின்ற சொற்கள்; தரு வினைத்து ஆகையின் - (சீதையைத் தேடித்) தருகின்ற தொழிலைத் தன்னிடம் கொண்டுள்ளமையால்; தாழ்விற்று ஆகுமோ - தாழ்வான தன்மையுடையதாகுமோ? பரதன் நீ - பரதனைப் போன்ற (என்பால் அன்புடைய) நீ: இனையன பகரற்பாலையோ - இத் தன்மையான சொற்களைச் சொல்லத் தகுமா (என்று சுக்கிரீவனை நோக்கிக் கூறினான்).

காலங் கழித்து நீ குறித்த தவணை தவறினாய் என்றாலும் சீதையைத் தேடித் தராமையைக் குறித்து இரங்கிக் கூறிய நின் சொற்கள் சீதையைத் தேடித் தரும் உன் உறுதியைத் தெரிவிக்கின்றன. ஆதலால் உனக்கு ஒரு தாழ்வுமில்லை. ஆகவே பரதனைப் போன்று என்னிடம் அன்புபாராட்டும் நீ உன்னைத் தாழ்த்திக் கூறுதல் தகுதியன்று எனச் சுக்கிரீவனை நோக்கி இராமன் கூறினான் என்பது.

இங்கே இராமனுடைய பரந்த கருணையும் பிறர் குற்றங்களைப் பொறுத்தாற்றும் பண்பும் வெளிப்படுதலைக் காணலாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. And he on whose chest Tiru dwells said: 'Even though it came and ended,
  2. the season so hard to get through, your words, which know your duty,
  3. are words that will bring about the deed; how then can they be lowly?
  4. You are Paratan to me! Is it right for you to say such things?'

What the poem says

Irāmaṉ, on whose chest the goddess Tiru lives, answers with great kindness. It is true the long rainy season has passed and the deadline has been missed, but Cukkirīvaṉ's words of remorse show his commitment to finding Cītai, so there is nothing base in him. Irāmaṉ calls him another Paratan, his loving and loyal brother, and tells him not to belittle himself. The verse shows Irāmaṉ's readiness to forgive.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tiru uṟai mārpaṉum tīrntatēyum vantu
oruva aruṅ kālam uṉ urimaiyōr urai
taru viṉaittu ākaiyiṉ tāḻviṟṟu ākumō?
parataṉ nī! iṉaiyaṉa pakaraṟpālaiyō?'