கம்பராமாயணம் 4490 · கிட்கிந்தா 10.132

Section கிட்கிந்தா காண்டம் / 10. கிட்கிந்தைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வனைகழல்- கட்டிய வீரக் கழலையும்; வரிசிலை வள்ளியோய் - கட்டமைந்த வில்லையுமுடைய வள்ளலே! யான் உடை - என்னுடைய; இயல்பும் எண்ணமும் - தன்மையும் மனக்கருத்தும், நினைவும் - எண்ணங்களும், இனையன என்றால் - இத் தன்மையனவாக இருந்தால்; இனி யான் - இனிமேல் நான்; நின்று செயும் - துணையாக இருந்து செய்யப் போகின்ற; வினையும் நல்லாண்மையும் - செயலையும் சிறந்த வீரத்தையும்; விளம்ப வேண்டுமோ - சொல்லத் தகுமோ; என்றான் - (இராமனை நோக்கிச் சுக்கிரீவன் மனம் வருந்திக்) கூறினான்.

நீ மனத்தில் பெருந் துயரத்தோடு இருக்கவும் நானோ சீதையைத் தேடித்தர வேண்டிய முயற்சி செய்யாமல் இன்ப நுகர்ச்சியில் இதுவரையில் மனம் தோய்ந்திருந்தமையால், இனி அச் செயலை விரைந்து முடிப்பேனென்று எனது செயலாண்மையைக் கூறுவதற்கும் என் நாத் துணியவில்லை என்று சுக்கிரீவன் தன்செயலுக்கு வருந்திக் கூறுகின்றான் என்பது.

ஓர் உதவியும் தான் செய்யாதிருந்த போதும் தனது பகையைப் போக்க, மனைவியைத் தன்னிடம் சேர்த்து அரசபோகத்தையும் அருளிய கருணை நோக்கிச் சுக்கிரீவன் இராமனை 'வள்ளியோய்' என்றான். மதுவுண்டு களிக்கும் குரங்கின் இயல்பும், போகத்திலேயே ஆழ்ந்து கிடக்கும் எண்ணமும், கைம்மாறு செய்வதற்கு விரைந்து நில்லாத நினைவும், என்பான் 'இயல்பும் எண்ணமும் நினைவும்' என்றான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'If such are my nature, my intent
  2. and my thoughts, then the deeds I shall do from now on, standing by you,
  3. and my fine valour, need they even be spoken of,
  4. generous one, with your fastened anklets and banded bow?' he said.

What the poem says

Cukkirīvaṉ ends his confession in deep shame. Given what his nature, intentions and thoughts have proved to be, a monkey's love of drink, absorption in pleasure and slowness to repay a kindness, he cannot bring himself to boast of the great deeds he will now do on Irāmaṉ's behalf.

He calls Irāmaṉ "generous one" because Irāmaṉ destroyed his enemy and restored his wife and kingdom before he had done anything in return.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'iṉaiyaṉa yāṉuṭai iyalpum eṇṇamum
niṉaivum eṉṟāl iṉi niṉṟu yāṉ ceyum
viṉaiyum nal āṇmaiyum viḷampa vēṇṭumō?
vaṉai kaḻal vari cilai vaḷḷiyōy!' eṉṟāṉ.