கம்பராமாயணம் 4489 · கிட்கிந்தா 10.131
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
(பின்னும் இராமனை நோக்கிச் சுக்கிரீவன்); பெருந்திசை அனைத்தையும் - பெரிய திக்குகள் எல்லாவற்றையும், பிசைந்து தேடினேன் - துருவித் தேடிப் பார்த்து; தரும் தகை - சீதையைக் கொண்டுதரக் கூடிய திறமை; அமைந்தும் - (என்னிடம்) இருந்தும்; அத் தன்மை செய்திலேன் - அவ்வாறு செய்யாதவனாய்; திருந்து இழை திறத்தினால் - வேலைப்பாடு மிக்க அணிகளை அணிந்தவளான சீதையின் பொருட்டு; தெளிந்த சிந்தை நீ- இயல்பாகவே கலக்கம் இல்லாமல் தெளிந்த மனமுடைய நீ; வருந்தினை இருக்க - வருந்தி இருக்கவும்; யான் - (அதைச் சிறிதும் எண்ணாமல்) நான்; வாழ்வில் வைகினேன் - இன்ப வாழ்க்கையில் காலங்கழித்தேன்.
கலங்காத இராமனது மனம் கலங்கியிருக்க அதைத் தெளிவிக்கும் வல்லமை தனக்கு இருந்தும் அதற்கேற்ற வழிமுறையும் தேடாது இன்ப வாழ்வில் பொழுது போக்கியிருந்த தன் பேதைமையைச் சுக்கிரீவன் வெறுத்துக் கூறுகின்றான் என்பது. திருந்திழை - சீதை: அன்மொழித் தொகை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Though I had the power to search, kneading through every great direction,
- and to bring her back, I did not do so;
- while you, whose mind is ever clear, were grieving
- for the lady of fine jewels, I lived on in pleasure.'
What the poem says
Cukkirīvaṉ continues his confession. He had the strength to scour every corner of the earth and bring Cītai back, but did nothing. While Irāmaṉ, whose mind is by nature calm and clear, was tormented with grief for his wife, Cukkirīvaṉ was enjoying himself. "Lady of fine jewels" is an epithet standing for Cītai.