கம்பராமாயணம் 4488 · கிட்கிந்தா 10.130
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
பின்னரும் - (சுக்கிரீவன் இராமனை நோக்கி) மறுபடியும், விளம்புவான் - கூறுவான்; 'பெருமையோய்- பெருமைக் குணமுடையவனே! மன்னவ - அரசனே! நினது இன் அருள் - உனது இனிய அருளால்; உதவிய செல்வம் எய்தினேன் - கிடைத்தற்கரிய செல்வத்தை அடைந்தேன்; நின் பணி மறுத்து வைகி - (அவ்வாறு பெற்றிருந்தும்) உனது கட்டளையை மீறி நடந்து; என் புல் நிலை - எனது அற்பமான; குரங்கு இயல் புதுக்கினேன் - குரங்குப் புத்தியைப் புதிதாக வெளிப் படுத்தி விட்டேன்; என்றான் - என்று கூறினான்.
உதவி செய்தவர் திறத்தில் செய்ந்நன்றி மறந்து பிழை செய்த தனது இழிகுணத்தைச் சுக்கிரீவன் வெறுத்துக் கூறுகின்றான் என்பது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Then he spoke again: 'Great one! I gained the wealth
- that your sweet grace bestowed;
- but, king, I lingered, refusing your service, and
- made fresh display of my base monkey nature,' he said.
What the poem says
Cukkirīvaṉ now confesses openly. Through Irāmaṉ's grace he received his kingdom and its riches, yet he neglected the service he owed in return and so showed once again the lowly fickleness of a monkey. He speaks with self-contempt for his ingratitude to his benefactor.