கம்பராமாயணம் 4487 · கிட்கிந்தா 10.129

Section கிட்கிந்தா காண்டம் / 10. கிட்கிந்தைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1பொருளுடை அவ் உரை கேட்ட போழ்து வான்
உருளுடைத் தேரினான் புதல்வன்'ஊழியாய்!
இருளுடை உலகினுக்கு இரவி அன்ன நின்
அருளுடையேற்கு அவை அரியவோ?'என்றான்.

பொருள் · Meaning in Tamil

பொருளுடை - சிறப்பான பொருள் பொருந்திய; அவ் உரை கேட்ட போழ்து - (இராமனது) அந்தச் சொற்களைக் கேட்ட அளவில்; வான உருள் உடை - ஆகாயத்தில் செல்லுகின்ற ஒற்றைச் சக்கரத்தையுடைய; தேரினோன் புதல்வன் - தேரைக் கொண்டவனான சூரியன் மகனாகிய சுக்கிரீவன்; (இராமனைப் பார்த்து); ஊழியாய் - ஊழிக் காலத்தும் அழியாது நிலைத்துள்ளவனே! இருள் உடை - இருளையுடைய; உலகினுக்கு இரவி அன்ன - உலகத்திற்குக் கதிரவன் போன்ற; நின் அருளுடையேற்கு - உனது அருளைப் பெற்ற எனக்கு; அவை அரியவோ - அச் செயல்கள் அருமையானவையோ? என்றான் - என்று கூறினான்.

சுக்கிரீவன் தன் மனைவியைப் பிரிந்து வாலியினால் துரத்தப்பட்டு உருசிய முக மலையில் செய்வது இன்னதென்று தெரியாமல் திகைத்து நின்ற காலத்தில், தன் துயரம் யாவும் ஒருங்கே நீங்குமாறு வந்த இராமனுக்கு, புற இருள் கவிந்து செய்தொழில் அறியாது மயங்கிக் கிடக்கும் இவ்வுலக உயிர்களுக்கு அந்த இருளை நீக்குமாறு தோன்றும் கதிரவனை உவமையாக்கினார். உனது கருணையொன்று தானே எனக்கு எல்லாவற்றையும் இனிது நடத்துகின்றது என்பான் 'நின் அருளுடையேற்கு அவை அரியவோ' என்றான். இத் தொடர்களால், சுக்கிரீவன் இராமனிடம் கொண்ட பக்தியும், நயம்பட உரைக்கும் ஆற்றலும் தெளிவாம். உருள்- ஒற்றைச் சக்கரம். அரியவோ - ஓகாரம் எதிர்மறை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When he heard those meaningful words, the son of him whose chariot
  2. has a wheel in the sky said, 'You who endure through the ages!
  3. For me who has your grace, which is like the sun to a world in darkness,
  4. are those things hard to come by?'

What the poem says

Cukkirīvaṉ, son of the Sun, whose chariot runs on a single wheel across the sky, answers Irāmaṉ's courteous questions. Irāmaṉ is eternal, outlasting even the dissolution of the ages. When Cukkirīvaṉ was lost and helpless on Mount Ruśyamūka, Irāmaṉ came to him like the sun rising on a dark world. With such grace behind him, how could all be anything but well in his kingdom?

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1poruḷuṭai av urai kēṭṭapōḻtu vāṉ
uruḷuṭait tēriṉōṉ putalvaṉ 'ūḻiyāy!
iruḷuṭai ulakiṉukku iravi aṉṉa niṉ
aruḷuṭaiyēṟku avai ariyavō?' eṉṟāṉ.