கம்பராமாயணம் 4486 · கிட்கிந்தா 10.128

Section கிட்கிந்தா காண்டம் / 10. கிட்கிந்தைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அயல் இனிது இருத்தி - (இராமன் சுக்கிரீவனை) அருகில் இனிமையாக இருக்கச் செய்து; நின் அரசும் ஆணையும் - (அவனை நோக்கி) உனது ஆட்சியும் ஆணையும்; இயல்பினில் இயைந்தவே - ஒருவகை இடருமின்றி நூல்கள் கூறிய முறையால் இயல்பாகவே அமைந்துள்ளனவா? புயல் பொரு தடக்கை - மேகம் போன்ற (கைம்மாறு கருதாமல் கொடுக்கவல்ல) நீண்ட கைகளையுடைய, நீ புரக்கும் பல் உயிர் - உன்னால் காக்கப்படுகின்ற பல உயிர்களும்; இனிதின் வைகுமே - இன்பமாக வாழ்ந்து வருகின்றனவா? குடை வெயில் இலதே - உனது வெற்றிக் குடை வெம்மைத் தராமல் இருக்கிறதா? என வினாயினான் - என்று கேட்டான்.

இராமனது முதல் வினா சுக்கிரீவனது நன்மையையும், பிற வினாக்கள் குடிகளின் நன்மையையும் கருதி நிகழ்ந்தவை. அரசாட்சி, அரசபாரம் எனப்படுவதாலும், அதைச் செய்யும்போது எங்கும் தன் ஆணை செல்லவேண்டியிருப்பதாலும் அவை எவ்வித டை ன் டைப்படாமல் நடக்கின்றனவா என்பான் 'நின்னரசும் ஆணையும் இயல்பினின் இயைந்தவே' என்றும், அவை எங்கும் தடையின்றிச் சென்றாலும் குடிகளுக்கு இனிமை தருவது இன்றியமையாததாதலால் 'நீ புரக்கும் பல்லுயிர் இனிதின் வைகுமே' என்றும் வினவினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Seating him pleasantly beside him, he asked: 'Are your kingship and your command
  2. running in their natural course? Do the many lives you protect,
  3. you whose great hands rival the rain-cloud, dwell in happiness?
  4. Does your parasol give no heat?'

What the poem says

Irāmaṉ seats Cukkirīvaṉ beside him and asks after his kingdom in the courteous manner of a king greeting a king. Is his rule running smoothly and is his authority obeyed? Are the subjects whom he protects living happily? Does his royal parasol give shade without scorching, that is, is his rule gentle and not oppressive? The generous hand is compared to the rain-cloud, which gives without expecting return.

There is no hint of reproach; the questions show Irāmaṉ's graciousness.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ayal iṉitu irutti 'niṉ aracum āṇaiyum
iyalpiṉiṉ iyaintavē? iṉitiṉ vaikumē
puyal poru taṭakkai nī purakkum pal uyir?
veyil ilatē kuṭai?' eṉa viṉāyiṉāṉ.