கம்பராமாயணம் 4498 · கிட்கிந்தா 10.140
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அன்று அவண் இறுத்தனர் - அன்றைய இரவு முழுவதும் (இராமலக்குவர்) அந்த இடத்தில் தங்கியிருந்தார்கள்; அலரி கீழ்த் திசை - கதிரவன் கிழக்குத் திசையிலுள்ள; பொன் திணி நெடுவரை- பொன் மயமான பெரிய உதய மலையிலே; பொலிவுறாத முன் - விளங்கித் தோன்றாததற்கு முன்பே (கதிரவன் உதிப்பதற்கு முன்பு); வல் திறல் தூதுவர் - மிக்க வலிமையுடைய தூதர்கள்; கொணர - சென்று அழைக்க; குன்று உறழ் வானர நெடும் படை- மலையைப் போன்ற வானர சேனை; அடைதல் - வந்து சேர்ந்த விதத்தை, கூறுவாம் - (இனி) எடுத்துச் சொல்வோம்.
அலரி - பரவுகின்ற கதிர்களையுடையவனெனச் சூரியனுக்குக் காரணம் குறியாயிற்று.
ஆங்கிலம் · English translationAI
Translation
- They stayed there that day; before the sun shone forth
- on the long mountain dense with gold in the eastern quarter,
- we shall tell how the vast army of monkeys, like mountains,
- arrived, brought in by messengers of great strength.
What the poem says
The last verse of the Kiṭkintai chapter. Irāmaṉ and Ilakkuvaṉ spend the night on the mountain. The poet then announces his next subject: how, even before the sun rose over the golden eastern mountain, the hill-like monkey armies arrived, summoned by the powerful messengers. The next chapter, the "Viewing of the Army", follows.