கம்பராமாயணம் 4499 · கிட்கிந்தா 11.1
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அச்சதவலி என்பவன் - அந்தச் சதவலி என்னும் வானர வீரன்; ஆயிரம் ஆயிரத்து ஆனை - பத்து இலட்சம் யானைகளின்; எறுழ்வலி அமைந்த - மிக்க வன்மையோடு பொருந்திய; வானர அதிபர் ஆயிரர் - வானர சேனைத் தலைவர் ஆயிரம் பேர்; உடன்வர - தன்னைப் பின்தொடர்ந்து வர; வகுத்த - அணிவகுக்கப்பட்ட; கூனல் மா - முதுகு கூனியுள்ள பெரிய; ஐ இரண்டு ஆயிர கோடி - பதினாயிரம் கோடி, குரங்குத் தானையோடு - வானர சேனையோடு; சார்ந்தான் - சுக்கிரீவனிடம் வந்தான்.
எறுழ் வலி: ஒரு பொருட் பன்மொழி. சதவலி: முகத்தில் நூறு மடிப்புகளையுடையவன். வான்மீகத்தில் இப்பெயர் 'சதபலி' என்று காணப்படுகிறது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- With a thousand monkey chiefs, each having the mighty strength
- of a thousand thousand elephants, coming along with him, and with an army
- of great hunched monkeys, ten thousand crores, drawn up in ranks,
- the one called Catavali arrived.
What the poem says
The chapter "Viewing of the Army" opens with the arrival of the monkey commanders. First comes Catavali (Śatabali in Vālmīki), with a thousand chieftains, each as strong as a million elephants, and ten thousand crores of hunched, powerful monkeys. The poet will list commander after commander, each with an impossibly vast host, to convey the scale of the force gathering for Irāmaṉ.