கம்பராமாயணம் 4500 · கிட்கிந்தா 11.2

Section கிட்கிந்தா காண்டம் / 11. தானை காண் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

சுசேடணன் எனும் பெயர் தோன்றல் - சுசேடணன் என்னும் பெயரையுடைய வானர வீரன்; மேருவை ஊன்றி எடுக்குறும் - மேரு மலையையும் பேர்த்து எடுக்கவல்ல; மிடுக்கினுக்கு உரிய - வலிமையுடையதும்; தேன் தெரிந்து உண்டு - மதுவை ஆராய்ந்து பருகி; தெளிவுறு - மயக்கமின்றித் தெளிவு பெற்றனவுமான; ஆன்ற வானர சேனை பத்து நூறு ஆயிர கோடியோடு - சிறந்த பத்து இலட்சங் கோடி வானர சேனையோடு; அமைய வந்து தோன்றினான் - பொருந்த வந்து சேர்ந்தான்.

மேருவையும் பேர்த்து எடுக்கக் கூடிய வல்லமையமைந்த பத்து இலட்சங் கோடி வானர சேனையோடு சுசேடணன் வந்து சேர்ந்தான் என்பது. சுசேடணன்: இவன் வாலியின் மனைவியான தாரைக்குத் தந்தை: வருணதேவன் மைந்தன் என்றும் கூறுவர். தோன்றல்: நல்ல தோற்றமுடையவன் என்று காரணக்குறியாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With a monkey army fit for the strength to plant itself and lift Mount Mēru,
  2. that chooses its honey with care and drinks it yet stays clear-headed,
  3. numbering a full ten hundred thousand crores,
  4. the noble one named Cucēṭaṇaṉ came and appeared.

What the poem says

Next comes Cucēṭaṇaṉ (Suṣeṇa), the father of Tārai and said to be a son of the sea god Varuṇa. He brings ten lakh crores of monkeys strong enough to uproot Mount Mēru. They drink honey but choose it carefully and stay clear-headed, a pointed contrast with Cukkirīvaṉ's recent drunkenness.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ūṉṟi mēruvai eṭukkuṟum miṭukkiṉukku uriya
tēṉ terintu uṇṭu teḷivuṟu vāṉarac cēṉai
āṉṟa pattu nūṟu āyira kōṭiyōṭu amaiyat
tōṉṟiṉāṉ vantu cucēṭaṇaṉ eṉum peyart tōṉṟal.