கம்பராமாயணம் 4501 · கிட்கிந்தா 11.3

Section கிட்கிந்தா காண்டம் / 11. தானை காண் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஈறு இல் வேலையை இமைப்புறும் அளவினில் கலக்கிச்
சேறு காண்குறும் திறல் கெழு வானரச் சேனை
ஆறு எண் ஆயிர கோடியது உடன் வர, அமுதம்
மாறு இலா மொழி உருமையைப் பயந்தவன் வந்தான்.

பொருள் · Meaning in Tamil

அமிழ்தம் மாறு இலாமொழி - தேவ அமிழ்தமும் இணையாகாத (இனிய) சொற்களையுடைய; உருமையைப் பயந்தவன் - சுக்கிரீவன் மனைவியான உருமையைப் பெற்ற தந்தை; ஈறு இல் வேலையை - முடிவு காணப்படாத கடலையும்; இமைப்புறும் அளவினில் - கண் இமைக்கும் நேரத்தில்; கலக்கிச் சேறு காண்குறும் - கலக்கிச் சேறாக்க வல்ல; திறல் கெழு - வலிமை நிறைந்த; வானர சேனை ஆறு எண் ஆயிர கோடியது - நாற்பத்தெட்டாயிரங் கோடி வானர சேனை, உடன் வர - தன்னைத் தொடர்ந்து வர; வந்தான் - வந்து சேர்ந்தான்.

உருமையின் தந்தை தாரன் என்பவன்; இவன் தேவகுருவாகிய பிரகஸ்பதியின் மைந்தன். இத் தாரன் கடலையும் கலக்கிச் சேறாக்க வல்ல நாற்பத்தெட்டாயிரங் கோடி வானர சேனையோடு வந்தான் என்பது.

கோடியது: (கோடி + அது) - அது பகுதிப் பொருள் விகுதி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With a mighty monkey army able, in the blink of an eye, to churn
  2. the endless ocean until its mud is seen,
  3. six times eight thousand crores strong, coming with him,
  4. the father of Urumai, whose words nectar cannot match, arrived.

What the poem says

The third commander is Tāraṉ, father of Urumai, Cukkirīvaṉ's wife, whose speech is sweeter than nectar; he is said to be a son of Bṛhaspati, the gods' preceptor. His forty-eight thousand crores of monkeys could stir up the boundless ocean in an instant until its muddy bed showed.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1īṟu il vēlaiyai imaippuṟum aḷaviṉil kalakkic
cēṟu kāṇkuṟum tiṟal keḻu vāṉarac cēṉai
āṟu eṇ āyira kōṭiyatu uṭaṉ vara, amiḻtam
māṟu ilā moḻi urumaiyaip payantavaṉ vantāṉ.