கம்பராமாயணம் 4502 · கிட்கிந்தா 11.4
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
இம்பர் ஞாலத்தும் - இந்த உலகத்திலும்; வானத்தும் - விண்ணுலகத்திலும்; எழுதிய சீர்த்தி - பொறித்த பெரும்புகழையுடைய; நம்பனைத் தந்த - சிறந்தவனான அனுமனைப் பெற்ற; கேசரி - கேசரி என்னும் வானர வீரன்; ஐம்பது ஆய நூறாயிரம் கோடி எண் அமைந்த - ஐம்பது இலட்சங் கோடி என்று கணக்கிடப் பெற்ற; மால் வரை புரை- கைலை மலையைப் போன்ற; மொய்ம்பு நெடு வானரம் - தோள்களையுடைய பெரிய வானர சேனை; மொய்ப்ப - தன்னை நெருங்கி வர; கடல் என நடந்தான் - கடல் போன்ற தோற்றத்தோடு வந்தான்.
சேனையோடு வந்த கேசரிக்கு அலையோடு கூடிய கடல் உவமையாயிற்று. அனுமன், தன் செயலால் மிகப் புகழ் பெற்றானாதலால் அவனை 'இம்பர் ஞாலத்தும் வானத்தும் எழுதிய சீர்த்தி நம்பன்' என்றார். சீர்த்தி நம்பன்; புகழ் உருவாகிய அனுமன். நம்பன்: எல்லாரும் விரும்பும் குணமுடையவன். நம்பன் : சிவன் என்னும் பொருளும் உண்டு; சிவபெருமான் அம்சமாகப் பிறந்தவன் எனவும் கொள்ளலாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- With fifty hundred-thousand crores in number
- of tall monkeys, their shoulders like great mountains, crowding around,
- Kēcari, who fathered the worthy one whose fame is written on this earth and in heaven,
- came marching like the sea.
What the poem says
Next arrives Kēcari, father of Aṉumaṉ, whose fame is inscribed on earth and in heaven. He comes with fifty lakh crores of tall monkeys with mountain-like shoulders, and advances like the surging sea.
The word used for Aṉumaṉ, nampaṉ, means one whom all love, but it is also a name of Śiva, and the commentary notes the tradition that Aṉumaṉ was born of a portion of Śiva.