கம்பராமாயணம் 4503 · கிட்கிந்தா 11.5
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
எறுழ் வலித் தூமிரன் - மிக்க வலிமையுடைய தூமிரன் என்பவன்; மண்கொள் வாள் எயிறு - பூமியைக் குத்தியெடுத்த ஒளியமைந்த பற்களையுடைய; ஏனத்தின் வலியின - (திருமாலின் அவதாரமான வராகம் (பன்றி) போன்ற வன்மை பெற்றனவாகி, வயிரத் திண் கொள் - உறுதியான வலிமை கொண்ட; மால் வரை - பெரிய மலையும், மயிர்ப் புறத்தன எனத் திரண்ட - ஒரு மயிர்க் காலிலேயடங்கக் கூடுமென்று சொல்லும்படி உருண்டு பருத்த உருவம் கொண்டனவும்; கண் கொள் ஆயிர கோடியின் இரட்டியில்- இடம் மிகுதியாகக் கொண்ட இரண்டாயிரங் கோடியாக; கணித்த - கணக்கிடப்பட்டவையுமாகிய, எண்கின் ஈட்டம் கொண்டு - கரடிக்கூட்டத்தை உடன் கொண்டு; இறுத்தான் - வந்து சேர்ந்தான்.
தூமிரன்: சாம்பவானுக்கு உடன் பிறந்தவன்; ஒரு கரடித் தலைவன். இவனது கரடிப் படையில் ஒவ்வொரு கரடியும் திருமாலின் வராகம்போன்று வலிமையையும், ஒரு மயிர்க் காலில் பெருமலையும் அடங்கக் கூடிய பேருருவத்தையும் உடையன என்பது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Strong as the Boar whose gleaming tusks bore up the earth,
- massed so that a great mountain of diamond hardness would sit at a hair's root on their backs,
- a host of bears reckoned at twice a thousand crores, filling the eye,
- mighty Tūmiraṉ brought, and halted there.
What the poem says
Tūmiraṉ, a bear chieftain and brother of Cāmpaṉ (Jāmbavān), arrives with two thousand crores of bears. Each is as strong as Vishnu's Boar incarnation, which lifted the earth on its tusks from the ocean, and each is so huge that a whole mountain could hide in the root of a single hair of its coat.