கம்பராமாயணம் 4504 · கிட்கிந்தா 11.6

Section கிட்கிந்தா காண்டம் / 11. தானை காண் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

முனியும் ஆம் எனின் - (தனித்தனியே ஒவ்வொரு குரங்கும்) கோபங் கொள்ளுமாயின்; அருக்கனை முரண் அற முருக்கும் - சூரியனையும் வலிமை கெடும்படி அழிக்கும்; சலம் வரின் - அடங்காத பெருஞ்சினம் வந்தால்; தனிமை - தனித் தனியாகவே; தாங்கிய உலகையும் குமைக்கும் - தங்களைத் தாங்கிக் கொண்டுள்ள உலகத்தையும் குத்தியழிக்கும்; இனிய - மகிழ்ச்சியுடைய; மாக் குரங்கு ஈர் இரண்டு ஆயிர கோடி - நாலாயிரங் கோடி கொண்ட; அனிகம் முன்வர - வானர சேனைகள் தனக்கு முன்னே வர; ஆன் பெயர்க் கண்ணன் - கவாட்சன் என்பவன்; வந்து அடைந்தான் - வந்து சேர்ந்தான்.

சினம் கொண்டால் சூரியனையும் தனித் தனியே அழிக்க வல்லனவும், அவ்வாறே பூமியின்மீது சினம் கொண்டாலும், அதையும் குத்தி அழிக்க வல்லனவுமான நாலாயிரங் கோடி வானர சேனையுடனே கவாட்சன் என்பான் வந்தான் என்பது. சலம்: தணியாக் கோபம். அனீகம் : வடசொல் - இங்கே அணிகம் என வந்தது. ஆன் பெயர்க் கண்ணன்: கவாட்சன் என்ற வடமொழிப் பெயரின் தமிழாக்கம். கோ- பசு; அக்ஷி - கண்; கோ - அக்ஷி என்பது வடமொழிச் சந்தியின்படி கவாட்சி என்றாயிற்று.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. If they grow angry, they would crush even the Sun until its strength is gone;
  2. if rage comes on them, each alone would pound to pieces the world that bears them;
  3. with an army of cheerful great monkeys, twice two thousand crores,
  4. going before him, he whose name means cow-eyed came and arrived.

What the poem says

Next comes Kavāṭcaṉ (Gavākṣa), whose Sanskrit name means "cow-eyed"; the poet renders it in Tamil as "he whose eyes are named after the cow". His army of four thousand crores of monkeys is cheerful by nature, but any one of them, if angered, could destroy the Sun or smash the very earth they stand on.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1muṉiyum ām eṉiṉ arukkaṉai muraṇ aṟa murukkum,
taṉimai tāṅkiya ulakaiyum calam variṉ kumaikkum,
iṉiya māk kuraṅku īr iraṇṭu āyira kōṭi
aṉikam muṉ vara āṉ peyark kaṇṇaṉ vantu aṭaintāṉ.