கம்பராமாயணம் 4505 · கிட்கிந்தா 11.7
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தனிவரும் - தனித்து வருகின்ற; தடங்கிரி எனப் பெரியவன் - பெரியமலை போன்ற பெருந் தோற்றத்தையுடையவனும்; சலத்தால் - தணியாத கோபத்தால்; நினையும் நெஞ்சு இற - நினைப்பவர்களின் மனம் உடையும்படி; உரும் என உறுக்குறு நிலையன் - இடி போல (க் கண்டவரை நடுங்கச் செய்கின்ற தன்மையுமான; பனசன் என்பவன் - பனசன் என்ற வானரத் தளபதி, பன்னிரண்டு ஆயிர கோடி - பன்னிரண்டாயிரங் கோடி என்று சொல்லக் கூடிய; புனிதம் வெம் சினம் - தூய கடுங் கோபமுடைய; வானரம் படை கொடு - வானர சேனையோடு, புகுந்தான் - வந்து சேர்ந்தான்.
ஒத்தாரோடன்றிப் போர் செய்யாத தன்மையால் சினத்துக்கு வெம்மையுடன் புனிதமும் சேர்த்துக் கூறினார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Huge as a great mountain walking alone, one who in his fury
- roars like thunder so that the hearts of those who think of him break,
- the one called Paṉacaṉ, with twelve thousand crores
- of monkey troops of pure and fierce anger, came in.
What the poem says
Paṉacaṉ (Panasa) arrives, huge as a mountain on the move, whose thunderous roar shatters the courage of anyone who even thinks of him. He leads twelve thousand crores of monkeys. Their anger is called "pure" because they fight only with worthy opponents and never vent it unjustly.