கம்பராமாயணம் 4506 · கிட்கிந்தா 11.8

Section கிட்கிந்தா காண்டம் / 11. தானை காண் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1இடியும், மாக்கடல் முழக்கமும் வெருக் கொள இசைக்கும்
முடிவு இல் பேர் முழக்கு உடையன, விசையன, முரண,
கொடிய, கூற்றையும் ஒப்பன, பதிற்றைந்து கோடி
நெடிய வானரப் படைகொண்டு புகுந்தனன் நீலன்.

பொருள் · Meaning in Tamil

நீலன் - நீலன் என்பவன்; இடியும் மாக் கடல் முழக்கமும் - இடியோசையும் பெரிய கடலின் ஆரவாரமும்; வெருக் கொள - அஞ்சி அடங்கும்படி; இசைக்கும் - ஒலிக்கின்ற, முடிவு இல் பேர் உறுக்கு உடையன - எல்லையற்ற பேராரவாரத்தை உடையனவும்; விசையன - மிக்க வேகத்தையுடையனவும்; முரண - வலிமையுடையனவும்; கொடிய கூற்றையும் ஒப்பன - கொடுமையுள்ள யமனைப் போன்றனவுமாகிய; பதிற்றைந்து கோடி- ஐம்பது கோடி; நெடிய வானரப் படை கொண்டு - பெரிய வானர சேனையை உடன் கொண்டு; புகுந்தனன் - வந்து சேர்ந்தான்.

நீலன்: அக்கினியின் மகன்; இவன் வானர சேனைகள் எல்லாவற்றிற்கும் முதல் தலைவன். பத்து × ஐந்து : பதிற்றைந்து - இற்றுச் சாரியை பெற்ற ஐம்பதைக் குறிக்க வந்த பண்புத் தொகை. கொடுமையிலும் உயிர் கவர்வதிலும் கூற்று உவமை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Sounding endless great roars that make even thunder
  2. and the roar of the great sea take fright, swift, strong,
  3. cruel, like Death itself, fifty crores
  4. of tall monkey troops Nīlaṉ brought in with him.

What the poem says

Nīlaṉ, son of the fire god Agni and commander-in-chief of the whole monkey army, arrives with fifty crores of troops. Their roars frighten even thunder and the ocean; they are swift, strong, and as merciless as Death in taking life.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1iṭiyum, māk kaṭal muḻakkamum veruk koḷa icaikkum
muṭivu il pēr uṟukku uṭaiyaṉa, vicaiyaṉa, muraṇa,
koṭiya, kūṟṟaiyum oppaṉa, patiṟṟaintu kōṭi
neṭiya vāṉarap paṭai koṇṭu pukuntaṉaṉ nīlaṉ.