கம்பராமாயணம் 4508 · கிட்கிந்தா 11.10
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அக்கயன் எனும் பெயரன் - அக்கயன் என்னும் பெயரையுடைய வீரனும்; வேறு ஒரு மாநிலம் - (தாம் தங்குவதற்கு இந்த நிலவுலகம் போதாமையால்) வேறொரு அகன்ற பூமி; வேண்டும் என்று - வேண்டும் என்று; இளைத்து இரங்க முளைத்த - வருந்தி மனம் இரங்கும்படி தோன்றினவும்; முப்பதினாயிர கோடியின் - முப்பதினாயிரங் கோடி என்ற தொகை கொண்டு, முற்றும் விளைத்த - உலகமெங்கும் பரவியனவுமான; வெம் சினத்து அரி இனம் - கடுமையான கோபமுடைய சிங்கக் கூட்டங்களும்; வெருவுற விழிக்கும் - அஞ்சுமாறு நோக்குகின்ற; அளக்கரோடும் - வானர சேனைக் கடலோடும்; வந்து அடைந்தான் - வந்து சேர்ந்தான்.
ஒவ்வொன்றும் மிகவும் பருத்திருப்பதால் அக்கயனது முப்பதினாயிரங் கோடிச் சேனை தங்குவதற்கு இந்த உலகம் க் அட்ட கருத்து. அளக்கர்: கடல். சேனைக்கு உவமையாகுபெயர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Grown so many that, exhausted, they lament that another great earth is needed,
- thirty thousand crores spread over everything,
- glaring so that troops of fiercely angry lions take fright:
- with that ocean the one named Akkayaṉ came and arrived.
What the poem says
Akkayaṉ arrives with an ocean of thirty thousand crores of monkeys. They are so many and so huge that this earth is too small to hold them, and they complain that another world is needed. Their glare is enough to frighten even prides of furious lions.