கம்பராமாயணம் 4510 · கிட்கிந்தா 11.12
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
வகுத்த தாமரை மலர் அயன் - வாழ்நாள் இவ்வளவே என வரையறுத்த தாமரையாசனத்தானான நான்முகன்; நிசிசரர் வாழ்நாள் உகுத்த தீவினை - அரக்கர்களின் வாழ்நாளை அழித்திடும் தீவினை (ஆகிய இரு பெரும் சக்திகளுக்கு மீறிய); பொருவு அரும் வலி உடையான் - ஒப்பற்ற வலிமை உடையவனாகிய, துன்முகன் - துன்முகன் என்பவன்; பகுத்த பத்து நூறாயிரப் பத்தினின் இரட்டி - அணி வகுக்கப்பட்ட பத்து லட்சத்தின் இரட்டிப்பு அதாவது இருபது லட்சம்); தொகுத்த கோடி - கூட்டிய கோடி (அதாவது இருபதுலட்சம் கோடி); வெம்படை கொண்டு - கொடிய படைகளை அழைத்துக் கொண்டு; தொடர்ந்தான் - தொடர்ந்து வந்தான்.
துன்முகன்- அழகில்லாத முகத்தினன். நான்முகனால் அரக்கரின் வாழ்நாள் வரையறுக்கப்பட்டுள்ளது; அரக்கர் செய்த தீவினையும் அவர் வாழ்நாளுக்கு இறுதியை உருவாக்கியுள்ளது. இந்த இரண்டு சக்திகளுக்கும் மேலாகத் துன்முகனின் வலிமை அரக்கருக்கு அழிவு செய்தே தீரும் என்பது கருத்து.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Possessing great strength beyond compare with Ayaṉ on his lotus, who fixed the life-spans,
- and with the evil deeds that cut short the lives of the night-roaming demons,
- with a fierce army reckoned at twice ten times ten hundred thousand,
- gathered into crores, Tuṉmukaṉ followed.
What the poem says
Tuṉmukaṉ (Durmukha, "ugly-faced") follows with an army of twenty lakh crores. The demons' lives are bounded by two powers: the span fixed for them by Brahmā (Ayaṉ), seated on his lotus, and their own evil deeds, which hasten their end. Tuṉmukaṉ's strength surpasses both, and is sure to bring the demons to destruction.