கம்பராமாயணம் 4511 · கிட்கிந்தா 11.13

Section கிட்கிந்தா காண்டம் / 11. தானை காண் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1கோடி கோடி நூறாயிர எண் எனக் குவிந்த
நீடு வெஞ்சினத்து அரி இனம் இருபுடை நெருங்க
மூடும் உம்பரும், இம்பரும், பூழியில் மூழ்க
தோடு இவர்ந்த தார்க் கிரிபுரை துமிந்தனும் தொடர்ந்தான்.

பொருள் · Meaning in Tamil

தோடு இவர்ந்த தார்க்கிரி புரை- இதழ்கள் அமைந்த மலர் மாலையை அணிந்தவனும் மலையை ஒத்தவனுமான; துமிந்தன் - துமிந்தன் என்னும் வீரனும்; கோடி கோடி நூறு ஆயிரம் எண் எனக் குவிந்த - பல கோடி இலட்சக் கணக்காக நிறைந்த; நீடு வெஞ்சினத்து அரி இனம் - மிகக் கொடிய கோபத்தையுடைய வானரக் கூட்டம்; இரு புடை நெருங்க - இரு பக்கங்களிலும் நெருங்கி வரவும்; மூடும் உம்பரும் - பூமியின்மேல் கவிந்த ஆகாயமும்; இம்பரும் பூழியில் மூழ்க - இவ் வுலகமும் (அச்சேனைகள் வரும் போது எழும்) புழுதியில் மறைந்து விடவும்; தொடர்ந்தான் - பின் வந்தான்.

வீடணன் இராமனிடம் சரண்புக வருகையில் அவனை முதன் முதலாக எதிர்கொண்டவர்கள் இவ்விருவருமேயாவர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With hosts of monkeys of lasting fierce anger, heaped up to the count
  2. of crores of crores of hundred thousands, pressing close on both sides,
  3. so that the covering sky and this earth sank in dust,
  4. Tumintaṉ, like a mountain wearing a garland of petalled flowers, followed too.

What the poem says

Tumintaṉ (Dvivida), huge as a mountain and garlanded with flowers, follows with countless crores of fierce monkeys crowding on both sides of him, raising so much dust that sky and earth disappear in it. The commentary notes that he and his brother Mayintaṉ will later be the first to meet Vīṭaṇaṉ when he comes to seek refuge with Irāmaṉ.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kōṭi kōṭi nūṟāyiram eṇ eṉak kuvinta
nīṭu veñ ciṉattu ari iṉam iru puṭai neruṅka
mūṭum umparum, imparum, pūḻiyil mūḻka
tōṭu ivarnta tārk kiri purai tumintaṉum toṭarntāṉ.