கம்பராமாயணம் 4527 · கிட்கிந்தா 11.29
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அஞ்சொடு ஐ இரண்டு யோசனை - பதினைந்து யோசனைப் பரப்பளவு; அகலத்தது ஆகி- அகலம் உடையதாய், செஞ்செவே - நேராக; வடதிசை நின்று - வடக்கிலிருந்து; தென்திசை செல்ல - தெற்கு நோக்கிச் செல்வதற்கு; எழுக என - புறப்படுக என்று; எஞ்சல் இல் பெருஞ்சேனையை - குறைவற்ற பெரிய வானரப் படையை; ஏவி - ஏகுமாறு கட்டளையிட்டு; வெஞ்சினப் படை வீரரை உடன் கொண்டு - கொடிய சினம் உள்ள வானரப்படைத் தலைவரைத் தன்னுடன் வருமாறு அழைத்துக் கொண்டு; மீண்டான் - சுக்கிரீவன் இராமனிடம் திரும்பவும் வந்து சேர்ந்தான்.
படை நடைபோட்டுச் செல்லும்போது இராமபிரான் ஒரே இடத்திலிருந்து பார்ப்பதற்குச் சுக்கிரீவன் ஏற்பாடு செய்ததை இப்பாடல் புலப்படுத்துகின்றது. எழுக + என - எழுகென: (அகரம்) தொகுத்தல் விகாரம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Ordering the whole army, lacking nothing, to rise and march,
- in a column five and twice five yojanas wide,
- straight from the northern quarter to the southern,
- he came back, bringing the fiercely angry army chiefs with him.
What the poem says
Cukkirīvaṉ arranges a review. He orders the entire army to march in a column fifteen yojanas wide, straight from north to south, so that Irāmaṉ can watch it all pass from one vantage point. Then he returns to Irāmaṉ with the fierce commanders of the troops. A yojana is a traditional measure of distance of several miles.