கம்பராமாயணம் 454 · பால 8.47
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
கவர் உடை எயிற்றினர் - பிளவுப்பட்ட பற்களை உடையவர்களும், கடித்த வாயினர் - பற்களால் உதட்டைக் கடித்த வாயை உடையவர்களும்; துவர் நிறப்பங்கியர் - பவளம் போன்ற நிறமுடைய தலை மயிரை உடையவர்களும்; சுழல்கண் தீயினர் - சுழலுகின்ற கண்களிலே தீயை உடையவர்களும் ஆகிய இவர்களே; பவர் சடை அந்தணன் - செறிந்த சடை முடியை உடைய விசுவாமித்திரரின்; பணித்த தீயவர் இவர் - சொன்ன கொடிய அரக்கர்களாகும்; என இலக்குவனுக்கு இராமன் காட்டினான் - என்று இலக்குவனுக்கு இராமன் சுட்டிக் காட்டினான்.
கவர்: பிளவு. எயிறு: பல். துவர்: பவளம். பங்கி: மயிர் பவர்: செறிவு
ஆங்கிலம் · English translationAI
Translation
- Those with forked fangs, with lips bitten in rage,
- with hair the colour of coral, with fire in their rolling eyes:
- these are the evil ones the brahmin with the thick matted hair spoke of,
- said Irāmaṉ, pointing them out to Ilakkuvaṉ.
What the poem says
Irāmaṉ points out the attackers to Ilakkuvaṉ. With their split fangs, lips bitten in fury, coral-red hair and eyes rolling with fire, these are the evil ones the matted-haired sage warned them about.