கம்பராமாயணம் 455 · பால 8.48
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கண்ட அக்குமரனும் - இராமபிரான் காட்டக் கண்ட அந்த இளையவனான இலக்குவனும்; கடைக் கண் தீ உக - கடைக் கண்களிலே தீ சிதறும்படியாக; விண்தனை நோக்கி - வானத்தையும் பார்த்து; தன் வில்லை நோக்கினான் - தனது வில்லையும் பார்த்தான் (பின்பு); அண்டர் நாயக - (இராமனைப் பார்த்து) தேவர்களுக்குத் தலைவனே!; இனி வீழ்வன இவர் துண்டம் - இனி, கீழே வீழ்வது இவர்களுடைய உடலின் துண்டங்களே; ஈண்டு காண்டி - இப்போதே காண்பாயாக; என, தொழுது சொல்லினான் - என்று இராமனை வணங்கிக் கூறினான்.
அக்குமரன்: இளையவன். “கடைக்கண்”: கண்கடை சொல் மாற்று. உக: கக்க. அண்டர்: தேவர்கள். துண்டம்: சிதைந்த துணுக்கு. 'வீழ்வன' வினையாலணையும் பெயர் விண்தனை: 'தன்' அசை விண்ணை நோக்கி, வில்லையும் நோக்கினான் என்பது இராமன் ஆணையை எதிர்நோக்கி நின்றான் என்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- That prince, seeing them, with fire spilling from the corners of his eyes,
- looked at the sky, and looked at his bow:
- Lord of the gods, now you will see; here
- their pieces will fall, he said, with joined palms.
What the poem says
Ilakkuvaṉ's eyes flash fire. He glances up at the demons in the sky and then at his bow, ready for his brother's word.
Joining his palms to Irāmaṉ, whom he calls lord of the gods, he promises that Irāmaṉ will soon see the demons' bodies falling here in pieces.