கம்பராமாயணம் 456 · பால 8.49
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தூம வேல் அரக்கர் தம் - புகை காலும் வேலையுடைய அவ்வரக்கரது; நிணமும் சோரியும் - சதைத் துண்டங்களும் இரத்தமும்; ஓம வெம் கனல் இடை உகும் - தூய வேள்வித் தீயிலே சிதறி விழக்கூடும்; என்று உன்னியே - என்று நினைத்தவனாய்; தாமரைக் கண்ணனும் - தாமரை மலர் போன்ற கண்களை உடைய இராமபிரான்; சரங்களே கொடு - தனது அம்புகளைக் கொண்டே; கோமுனி இருக்கை - அரச முனிவனான விசுவாமித்திரனுடைய இருப்பிடத்தை; ஓர் கூடம் ஆக்கினான் - ஒரு கூடாரமாகச் செய்து விட்டான்.
தூமம்: புகை. நிணம்: உடற்சதை. சோரி: இரத்தம். ஓமம்: வேள்வி. உன்னி: நினைத்து. வெங்கனல்: பண்புத்தொகை. இருக்கை: இருப்பிடம். அரக்கரது நிணமும், ரத்தமும் வேள்வித் தீயில் விழாதபடி, இராமன் முனிவரது இருக்கையை, அம்புகளாலேயே ஒரு கூடாரமாக்கினான் என்பது கருத்து.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Thinking, The fat and blood of these Rākṣasas with their smoking spears
- may fall into the fierce sacrificial fire,
- the lotus-eyed one, with arrows alone,
- made the royal sage's seat into a covered hall.
What the poem says
Before fighting, Irāmaṉ takes care of the ritual. If the demons' flesh and blood fell into the sacred fire, the sacrifice would be polluted. So with his arrows alone he builds a canopy over the place where the royal sage Vicuvāmittiraṉ sits, shielding the fire.