கம்பராமாயணம் 457 · பால 8.50
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
நஞ்சு அட எழுதலும் - (பாற்கடலைக் கடைந்த போது) நஞ்சு தம்மை அழிப்பதற்கு எழுந்து வர; நடுங்கி, நாள்மதிச் செஞ்சடைக் கடவுளை அடையும் தேவர் போல் - நடுக்கம் கொண்டு பிறைச் சந்திரனை அணிந்துள்ள சிவந்த சடைமுடியினான சிவபிரானை அடைக்கலம் அடைந்த தேவர்களைப் போல்; வெஞ்சின அரக்கரை வெருவி - கொடுஞ் சினமுடைய அரக்கர்களுக்கு அஞ்ச; மாதவர் - வேள்விச் சாலையிலிருந்த முனிவர்கள் எல்லாம்; அஞ்சன வண்ண - மை போன்ற நிறத்தை உடைய இராம பிரானே; யாம் நின் அபயம் என்றனர் - நாங்கள் உன் அடைக்கலம் என்றார்கள்.
அட: அழிக்க. அடல்: தொழிற்பெயர் நாள்மதி: ஒருகலைச் சந்திரன். செம்மை+சடை: செஞ்சடை வெருவுதல்: அஞ்சுதல். அஞ்சனம்: மை. வண்ணம்: நிறம். பாற்கடலில் நஞ்சுஎழ, அஞ்சிய தேவர்கள் சிவபெருமானை அடைக்கலம் அடைந்தது போல, அரக்கர்களுக்கு அஞ்சிய முனிவர்கள் இராமபிரானை அடைக்கலம் அடைந்தனர் என்பது கருத்து.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Like the gods who, when the poison rose to destroy them, trembled
- and fled to the god whose red matted hair bears the young moon,
- the great ascetics, terrified of the treacherous Rākṣasas,
- said, O you of the colour of collyrium, we are under your protection.
What the poem says
The sages at the sacrifice panic and run to Irāmaṉ, dark as collyrium, saying they take refuge in him.
The simile recalls the churning of the Milk Ocean, when the deadly poison Hālāhala rose and the terrified gods fled to Civaṉ, who wears the crescent moon in his red matted hair and who saved them by swallowing it.