கம்பராமாயணம் 458 · பால 8.51

Section பால காண்டம் / 8. வேள்விப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கலங்கலீர் என - முனிவர்களே! கலக்கமுறாதீர்கள் என்று கூறி; கரதலம் கவித்தனன் - கைகளைக் கவித்து அவர்களை அமர்த்திய இராமபிரான்; சிலையின் தெய்வ நாண் - தனது வில்லின் தெய்வீகமான நாணை; செவித்தலம் நிறுத்தினன் - காதுவரை இழுத்து நிறுத்தினவனாய்; புவித்தலம் குருதியின் புணரி ஆக்கினான் - அந்தக் காட்டினையே இரத்தக் கடலாக்கினவனாய்; அரக்கர் தம் சிரத்தின் குன்றம் குவித்தனன் - அரக்கர்களின் தலைகளை மலையாகக் குவித்து விட்டான்.

கவித்தல்: அமர்த்தல். கரதலம்: உள்ளங்கை. செவித்தலம்: இரு பெயரொட்டுப் பண்புத் தொகை. நாண்: கயிறு. குருதி: இரத்தம். புணரி: கடல். சிரத்தின் குன்றம்: உருவகம்

கலங்காதீர்கள் எனக் கூறி, கையமர்த்தி வில்லின் நாணைக் காதுவரை இழுத்து நிறுத்தி - அந்தக் காட்டையே இரத்தக் கடலாக்கி - அரக்கர்களின் தலை மலைகளைக் குவித்துவிட்டான் இராமபிரான் என்பது கருத்து.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He held his palm down over them, saying, Do not be troubled;
  2. he drew the divine string of his bow and held it at his ear;
  3. he made the face of the earth a sea of blood;
  4. he heaped up a mountain of the Rākṣasas' heads.

What the poem says

Irāmaṉ calms the sages with a reassuring gesture of his palm, telling them not to fear. Then he draws the divine bowstring to his ear and turns the ground into an ocean of blood, piling the demons' severed heads into a mountain. Four short clauses, one per line, give the battle its speed.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kavittaṉaṉ karatalam; kalaṅkalīr eṉac
cevittalam niṟuttiṉaṉ cilaiyiṉ teyva nāṇ;
puvittalam kurutiyiṉ puṇari ākkiṉaṉ;
kuvittaṉaṉ arakkartam cirattiṉ kuṉṟamē.