கம்பராமாயணம் 459 · பால 8.52

Section பால காண்டம் / 8. வேள்விப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1திருமகள் நாயகன் தெய்வ வாளி தான்,
வெரு வரு தாடகை பயந்த வீரர்கள்
இருவரில், ஒருவனைக் கடலின் இட்டது; அங்கு
ஒருவனை அந்தகன் புரம் அத்து இன் உய்த்ததே.

பொருள் · Meaning in Tamil

திருமகள் நாயகன் - இலக்குமி கேள்வனாகிய இராமபிரானுடைய; தெய்வவாளிதான் - தெய்வத்தன்மை வாய்ந்த அம்பானது; வெரு வரு தாடகை பயந்த - மூவுலகும் அஞ்சும்படியான தாடகை பெற்ற; வீரர்கள் இருவரில் - வீரர்களான சுபாகு, மாரீசன் என்னும் இரண்டு பேரில்; ஒருவனைக் கடலில் இட்டது - ஒருவனான மாரீசனைக் கடலில் தள்ளிவிட்டது; அங்கு ஒருவனை - மற்றவனான சுபாகு என்பவனை; அந்தக புரத்தில் உய்த்தது - எமபுரியில் கொண்டு போய்ச் சேர்த்தது.

திருமகள் நாயகன் திருமால்: திருவின் அவதாரமான ராமனை இப்பெயரால் குறிப்பிட்டார் முன்பும் “திருமாலின் கேள்வன்” என்றது நினைவுகூரத் தக்கது. தெய்வ வாளி: தெய்வத்தன்மை வாய்ந்த அம்பு. அந்தகன்: எமன். புரம்: ஊர். உய்த்தல்: செலுத்துதல். ராமபிரானது தெய்வத்தன்மை வாய்ந்த அம்பு தாடகையின் பிள்ளைகளில் ஒருவனைக்கடலில் சேர்த்தது. மற்றொருவனை அந்தகனூர்க்குக் கொண்டு போய்ச் சேர்த்தது என்பது கருத்து.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The divine arrow of the lord of Tirumakaḷ,
  2. of the two warriors whom dreadful Tāṭakai bore,
  3. cast one into the sea; and there
  4. sent the other to the city of Death.

What the poem says

Irāmaṉ, the lord of Lakṣmī, deals with Tāṭakai's two sons. One of his divine arrows hurls Mārīcaṉ far away into the ocean, alive, while another sends Cuvāku to the city of Yamaṉ.

Mārīcaṉ's survival matters for the story: he will return much later as the golden deer that lures Irāmaṉ away from Cītai.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tirumakaḷ nāyakaṉ teyva vāḷitāṉ,
veruvaru tāṭakai payanta vīrarkaḷ
iruvaril, oruvaṉaik kaṭalil iṭṭatu; aṅku
oruvaṉai antakapurattiṉ uyttatē.