கம்பராமாயணம் 460 · பால 8.53

Section பால காண்டம் / 8. வேள்விப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

துணர்த்த பூந்தொடையலான் - கொத்தாக விரிந்தமலர் மாலையை அணிந்த ராமபிரான்; பகழி தூவினான் - (மற்றுமுள்ள அரக்கர்களின் மேல்) அம்புகளை ஏவினான்; கணத்திடை விசும்பினைக் கவித்து - அவ்வம்புகள் ஒரு கணப்போதில் வானத்தைச் சூழ்ந்து கொண்டு, தூர்த்து - மூடிவிட்டது; இவர் பிணத்திடை நடந்து - இந்த அரசகுமாரர்கள் பிணங்களின் மீது நடந்து வந்தேனும்; ஈண்டு பிடிப்பர் எனா - இங்கு நம்மைப் பிடித்துக் கொள்வார்கள் என்று; உணர்த்தினர் - ஒருவருக் கொருவர் தெரிவித்துக் கொண்டவர்களாய்; ஒருவர்முன் ஒருவர் ஓடினர் - அந்த அரக்கர்கள் ஒருவருக்கு முன் மற்றொருவராக ஓடலாயினர்.

துணர்த்த: கொத்தாக விரிந்த. தொடை: மாலை. பகழி: அம்பு. கவித்தல்: சூழுதல். தூர்த்தல்: மூடுதல் அல்லது மறைத்தல். விசும்பு: வானம். எனா: என்று. செயா என்ற வாய்பாட்டு வினையெச்சம். உணர்த்தினர்: முற்றெச்சம். ராமபிரான் அம்புகளை ஏவ அவை வானையும் மறைத்துவிட்டது. அஞ்சிய அரக்கர்கள் பிணத்தின் மேல் நடந்தேனும் நம்மைப் பிடித்துவிடுவார் என ஒருவருக்கு முன் ஒருவராக ஓடலாயினர் என்பது கருத்து.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He who wore a garland of clustered flowers scattered arrows,
  2. and because in an instant they vaulted over the sky and filled it,
  3. the demons warned one another, Walking over the corpses, these two will catch us here,
  4. and ran, each trying to get ahead of the other.

What the poem says

Irāmaṉ, wearing his flower garland, releases a storm of arrows that in a moment roofs over and fills the whole sky.

The surviving demons tell each other that the princes will come after them over the heaps of dead and seize them, and they flee in a scramble, each pushing to be first.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tuṇartta pūn toṭaiyalāṉ pakaḻi tūviṉāṉ,
kaṇattiṭai vicumpiṉaik kavittut tūrttalāl,
piṇattiṭai naṭantu' ivar piṭippar īṇṭu' eṉā
uṇarttiṉar oruvarmuṉ oruvar ōṭiṉār.