கம்பராமாயணம் 461 · பால 8.54
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஓடின அரக்கரை - அவ்வாறு பயந்து ஓடிய அரக்கர்களை; உருமின் வெங்கணை - அவர்களைக் கொல்லுமாறு ராமபிரானால் ஏவப்பட்ட கொடிய அம்புகள்; கூடின - உரிய இலக்கைப் போய்ச் சேர்ந்தன; குறைத்தலை - (அதனால் அரக்கர்கள் கொல்லப்பட அவர்களது குறையுடல்களான கவந்தங்கள்; மிறைத்து நின்று ஆடின - விறைத்து நின்று ரத்த வெள்ளத்தில் ஆடலாயின; அலகையும் - பிணங்களை வாரித்தின்ன வந்த பேய்களும்; ஐயன்கீர்த்தியைப் பாடின - இராமபிரானது வெற்றிப் புகழைப் பாடலாயின; பறவைப் பந்தர் பரந்தன - பந்தல் போலப் பறவைக் கூட்டம் வானத்தில் விரிந்தன.
உருமு: இடி. உருமின் வெங்கணை: இடி போன்ற கொடிய அம்பு. குறைத்தலை: தலை துணிக்கப்பட்ட முண்டம் (கவந்தம்). மிறைத்தல்: விறைத்தல். அலகை: பேய். ஐயன்: மேலோன். கீர்த்தி: புகழ். பரந்தல்: விரிதல். பந்தர்: பந்தல் ஈற்றுப் போலி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The fierce thunderbolt arrows caught up with the fleeing Rākṣasas;
- the headless trunks stood stiff and danced;
- the ghouls sang the glory of the noble one;
- and canopies of birds spread out over them.
What the poem says
Irāmaṉ's arrows, fierce as thunderbolts, overtake the fleeing demons. Their headless bodies stand rigid and seem to dance in the blood.
The ghouls who gather to feed on the dead sing Irāmaṉ's praises, and flocks of carrion birds spread overhead like a canopy. Battlefield ghouls and dancing trunks are a stock scene of Tamil war poetry.