கம்பராமாயணம் 462 · பால 8.55
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
பரந்த பூ மழை - தேவர்கள் பொழிந்த மலர்; பந்தரைக் கிழித்தது - பறவைக் கூட்டப் பந்தலைக் கிழித்துக் கொண்டு கீழே வீழ்ந்தது; அந்தர துந்துமி முகிலின் ஆர்த்தன - வானத்திலிருந்து துந்துமி வாத்தியங்கள் மேகங்களைப் போல முழங்கின; இந்திரன் முதலிய அமரர் ஈண்டினர் - இந்திரன் முதலான தேவர்கள் வானவீதியிலே வந்து திரண்டனராய்; சுந்தர வில்லியைத் தொழுது வாழ்த்தினார் - அழகிய வில்லாளனாகிய ராமனைத் தொழுது வாழ்த்தினார்கள்.
கிழித்தன: கிழித்துக் கொண்டு கீழே இறங்கின என்பது பொருள். பூமழை: மழை மிகுதிப் பொருளைத் தந்து நின்றது. துந்துமி - தேவர்கள் இசைக்கருவி. ஈண்டுதல்: கூடுதல் (திரள்தல்). சுந்தரம்: அழகு. வில்லி: வில்லை உடையவன். தொழுது: வணங்கி. வாழ்த்தினர்: துதித்தனர்: அரக்கர்களால் அல்லலுற்ற தேவர்கள் அவ்வல்லல் தீர்ந்தமையால் மகிழ்ந்து, ராமனை வணங்கி வாழ்த்தினர் என்பது கருத்து.
ஆங்கிலம் · English translationAI
Translation
- A spreading rain of flowers tore through that canopy;
- the kettledrums of the sky thundered like clouds;
- the immortals, with Intiraṉ at their head, crowded together
- and bowed to the handsome bowman and blessed him.
What the poem says
A shower of flowers from the gods breaks through the canopy of circling birds, and celestial drums boom like thunder. Intiraṉ and the other gods, relieved of the demons who had tormented them, gather in the sky, bow to the handsome archer, and sing his praises.