கம்பராமாயணம் 463 · பால 8.56
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
புனித மாதவர் - புனிதமான தவமுனிவர் எல்லோரும்; ஆசியின் பூமழை பொழிந்தார் - ஆசிமொழிகளாகிய மலர்மாரி பொழிந்தனர்; அனைய கானகத்து மரங்களும் - அந்தக் காட்டில் உள்ள பல வகை மலர்மரங்களும்; அலர் மழை சொரிந்த - மலர்மழை பொழிந்தன; அவ்வழி முனியும் - அப்போது விசுவாமித்திர முனிவனும்; வேள்வியை முறைமையின் முற்றி - வேள்வியை முறைப்படி செய்து முடித்து; இனிய சிந்தையன் - மகிழ்ந்த மனம் உடையவனாய்; இராமனுக்கு இனையன இசைத்தான் - இராமபிரானைப் பார்த்துப் பின் வருமிவற்றைச் சொல்லலானான்.
புனிதம்: தூய்மை. மாதவர்: சிறந்த முனிவர்கள். ஆசி: ஆசிமொழி. பொழிதல்: மிகப் பொழிதலாம். வினை உருவகம். அனைய: அந்த. கானகம் அத்து: கானகத்து. இதில் “அத்து” சாரியை. அலர்: நன்கு விரிதல். முற்றி: நிறைவேற்றி. இனிய சிந்தையன் என்பதை இராமனுக்குக் கூட்டி உரை கூறினும் அமையும். இசைத்தல்: சொல்லுதல்
ஆங்கிலம் · English translationAI
Translation
- The holy ascetics poured a rain of flowers in the form of blessings;
- the trees of that forest too showered down blossoms;
- and the sage, having completed the sacrifice there in due order,
- glad of heart, spoke these words to Irāmaṉ.
What the poem says
The holy sages shower Irāmaṉ with blessings as thick as falling flowers, and even the forest trees drop their blossoms on him. Vicuvāmittiraṉ, his sacrifice now properly completed, turns to Irāmaṉ with a glad heart and speaks.