கம்பராமாயணம் 4559 · கிட்கிந்தா 12.22

Section கிட்கிந்தா காண்டம் / 12. நாட விட்ட படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அவ் ஆறு கடந்து - அந்தக் கோதாவரியாற்றைத் தாண்டி; அப்பால் - பிறகு; அறத்து ஆறே என - தரும நெறியே போலவும்; தெளிந்த அருளின் ஆறும் - தெளிவான அருள் வழியும்; வெவ் ஆறு என - விரும்பத்தக்க நன்னெறியும் போலவும்; குளிர்ந்து - குளிர்ச்சியையடைந்தது; வெயில் இயங்காவகை இலங்கும் - சூரியனுடைய கதிர்கள் தன்னுள் புகாதபடி விளங்குகின்ற; விரி பூஞ்சோலை - மலர்ந்த பூக்கள் நிறைந்த சோலையானது; எவ் ஆறும் உறத் துவன்றி - எந்தப் பக்கங்களிலும் (தன் இரு கரைகளிலும்) மிக நெருங்கி; இருள் ஓட மணி இமைப்பது - (அச் சோலையில் அடர்ந்த) இருளானது அறவே அகலுமாறு இரத்தினங்கள் ஒளிவிடுவதற்கு இடமானதும்; இமையோர் வேண்ட - தேவர்கள் விரும்பியதால்; தெவ் ஆறுமுகத்து ஒருவன் - பகைவரையழிக்கவல்ல ஆறுமுகங்களையுடைய முருகன்; தனிக் கிடந்த சுவணத்தை - தனியாக இருந்த சுவண நதியை; சேர்திர்- சென்று அடையுங்கள்.

மாது, ஓ: ஈற்றசைகள்.

சோலையின் தண்மைக்கு அறநெறியையும் அருள் நெறியையும் உவமையாக்கினார். வெகுளிப்பண்பை வெம்மையதாகவும், சாந்த குணத்தைத் தண்ணியதாகவும் கூறுதல் கவிமரபு. சுவணநதியானது தன் இரு கரைகளிலும் சூரியன் கதிர்களும் உள்ளே புகாதவாறு மரங்கள் அடர்ந்த சோலைகள் நிரம்பப் பெற்று, அம் மரங்களின் அடர்த்தியால் செறிந்த இருளைத் தன்னிடமுள்ள இரத்தின ஒளியால் போக்குமென்பது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Crossing that river, beyond it, cool as the path of dharma, as the clear path of grace,
  2. as the path that is the opposite of the harsh one, where spreading flowering groves shine so that sunlight cannot move,
  3. crowded close along every side, where gems flash so that darkness flees: the river where, at the gods' request,
  4. the six-faced one, slayer of foes, lay alone, the Cuvaṇam, you will reach.'

What the poem says

Beyond the Kōtāvari lies the river Cuvaṇam (Suvarṇā). Its banks are lined with groves so dense that the sun cannot get in, as cool as the path of righteousness and the path of grace; anger is traditionally called hot and gentleness cool. The gems in its bed dispel the darkness under the trees. It is associated with the six-faced war god Murukaṉ (Skanda), who is said to have lain there alone at the gods' request, an allusion to the legend of his birth.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1av āṟu kaṭantu appāl, aṟattu āṟē eṉat teḷinta aruḷiṉ āṟum,
vev āṟu ām eṉak kuḷirntu, veyil iyaṅkā vakai ilaṅkum viri pūñ cōlai,
ev āṟum uṟat tuvaṉṟi, iruḷ ōṭa maṇi imaippatu, imaiyōr vēṇṭa,
tev āṟu mukattu oruvaṉ, taṉik kiṭanta cuvaṇattaic cērtir mātō.